![](pmdr0.gif)
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - காண்டம் 4
கிட்கிந்தா காண்டம் (முதற் பகுதி) /படலங்கள் 1- 7
rAmAyaNam of kampar
canto 4 (kishkintA kAnTam), part 1
(paTalams 1-7, verses 3810-4228)
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
providing us with a romanized transliterated version of this work and for permissions
to publish the equivalent Tamil script version in Unicode encoding
We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2012.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are :
http://www.projectmadurai.org/
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - கிட்கிந்தா காண்டம் (முதற் பகுதி) /படலங்கள் 1- 7
4.1 . பம்பைப் படலம் (3810-3852)
கிட்கிந்தா காண்டம் (முதற் பகுதி) (3810 - )
3810 - கடவுள் வாழ்த்து
மூன்று உரு எனக் குணம் மும்மை ஆம் முதல் ,
தோன்று உரு எவையும் அம்முதல ; சொல்லுதற்கு
ஏன்ற உரு அமைந்தவும் இடையில் நின்றவும்
ஊன்று உரு உணர்வினுக்கு உணர்வும் ஆயினான் . -
3811 - பம்பைப் வருணனை (3811-3831)
தேன் படி மலரது , செம் கண் வெம் கை மா
தான் படிகின்றது , தெளிவு சான்றது ,
மீன் படி மேகமும் படிந்து வீங்கும் நீர்
வான் படிந்து உலகு இடை கிடந்த மாண்பது . - 4.1.1
3812 - ஈர்ந்த நுண் பளிங்கு எனத் தெளிந்த ஈர்ம் புனல் ,
பேர்ந்து ஒளிர் நவ மணி படர்ந்த பித்திகைச்
சேர்ந்து உழி சேர்ந்துழி நிறத்தைச் சேர்தலால்
ஓர்ந்து உணர்வு இல்லவர் உள்ளம் ஒப்பது . . - 4.1.2
3813 - குவால் மணித் தடம் தொறும் பவளக் கோல் இவர்
கவான் அரச அன்னமும் பெடையும் காண்டலில்
தவா நெடும் வானகம் தயங்கும் மீனொடும்
உவாமதி உலப்பு இல உதித்தது ஒத்தது . - 4.1.23
3814 - ஓதம் நீர் உலகமும் உயிர்கள் யாவையும்
வேத பாரகரையும் விதிக்க வேட்ட நாள் ,
சீதம் நீர் உவரியைச் செகுக்குமாறு , ஒரு
காதி காதலன் தரு கடலின் அன்னது . - 4.1.4
3815 - எல் படர் நாகர் தம் இருக்கை ஈது எனக்
கிற்பது ஒர் காட்சியது எனினும் கீழ் உறக்
கற்பகம் அனைய அக் கவிஞர் நாட்டிய
சொல் பொருள் ஆம் எனத் தோன்றல் சான்றது . - 4.1.5
3816 - களம் நவில் அன்னமே முதல கண்ணகன்
தள மலர்ப் புள் ஒலி தழங்க , இன்னதோர்
கிளவி என்று அறிவு அரும் கிளர்ச்சித்து ; ஆதலால்
வள நகர்க் கூலமே போலும் மாண்பது . - 4.1.6
3817 - அரி மலர்ப் பங்கயம் அத்து அன்னம் , எங்கணும் ,
'புரி குழல் புகு இடம் புகல்கிலாத யாம் ,
திருமுகம் நோக்கலம் , இறந்து தீர்தும் ' என்று
எரி புகுவன எனத் தோன்றும் ஈட்டது . - 4.1.7
3818 - காசு அடை விளங்கிய காட்சித்து ஆயினும்
மாசு அடை பேதைமை இடை மயக்கலால்
ஆசு அடை நல் உணர்வு அனையது ஆம் எனப்
பாசு அடை வயின் தொறும் பரந்த பண்பது . - 4.1.8
3819 - களிப்பு அடா மனத்தவன் காணின் , கற்பு எனும்
கிளிப் படா மொழியவள் விழியின் கேள் எனத்
துளிப் படா நயனங்கள் துளிப்பச் சோரும் என்று
ஒளிப் படாது ஆயிடை ஒளிக்கும் மீனது . - 4.1.9
3820 - கழை படு முத்தமும் கலுழிக் கார் மத
மழை படு தரளமும் மணியும் வாரி , நேர்
இழை படர்ந்து அனைய நீர் அருவி எய்தலால்
குழை படு முகத்தியர் கோலம் ஒப்பது . - 4.1.10
3821 - பொங்கு வெம் கடம் கரி பொதுவின் ஆடலின்
கங்குலின் எதிர் பொரு கலவிப் பூசலின்
அங்கம் நொந்து அலசிய விலையின் ஆய் வளை
மங்கையர் வடிவு என வருந்தும் மெய்யது . - 4.1.11
3822 - விண் தொடர் நெடு வரைத் தேனும் வேழத்தின்
வண்டு உளர் நறு மத மழையும் மண்டலால்
உண்டவர் பெரும் களி உறலின் , ஓதியர்
தொண்டை அம் கனி இதழ்த் துப்பின் சான்றது . - 4.1.12
3823 - ஆரியம் முதலிய பதினெண் பாடையில்
பூரியர் ஒருவழிப் புகுந்தது ஆம் என
ஓர்வு இல கிளவிகள் ஒன்றொடு ஒப்பு இல
சோர்வு இல விளம்பு புள் துவன்றுகின்றது . - 4.1.13
3824 - தான் உயிர் உறத் தனி தழுவும் பேடையை
ஊன் உயிர் பிரிந்து என பிரிந்த ஓதிமம்
வான் அரமகளிர் தம் வயங்கு நூபுரத்
தேன் உகு மழலையைச் செவியின் ஓர்ப்பது . - 4.1.104
3825 - ஏறிடல் அரிய மால் வரை நின்று ஈர்த்து இழி
ஆறு இடு விரை அகில் ஆரம் ஆதிய
ஊறிட ஒண் நகர் உறைத்த ஒண் தளச்
சேறிடு பரணியில் திகழும் தேசது . - 4.1.105
3826 - நவ்வி நோக்கியர் இதழ் நிகர் குமுதத்து நறுந்தேன்
வவ்வி , மாந்தரில் களி மயக்கு உறுவன மகரம்
எவ்வம் ஓங்கிய இறப்பொடு பிறப்பு இவை என்னக்
கவ்வும் மீனொடு முழுகின எழுவன கரண்டம் . - 4.1.16
3827 - கவள யானை அன்னாற்கு அந்தக் கடி நறும் கமலம் அத்து
அவளை ஈகிலம் , ஆவது செய்தும் , என்று அருளித்
திவள அன்னங்கள் திரு நடை காட்டுவ , செம் கண்
குவளை காட்டுவ , துவர் இதழ் காட்டுவ குமுதம் . - 4.1.17
3828 - பெய் கலன்களின் இலங்கு ஒளி மருங்கொடு பிறழ ,
வைகலும் புனல் குடைபவர் வான் அரமகளிர் ,
செய்கை அன்னங்கள் ஏந்திய சேடியர் என்னப்
பொய்கை அன்னங்கள் ஏந்திய பூ கொம்பர் பொலிவ . - 4.1.18
3829 - ஏலும் நீர் நிழல் இடையிடை எறித்தலின் , படிகம்
போலும் வார்புனல் புகுந்து உள ஆம் எனப் பொங்கி ,
ஆலும் மீன் கணம் அஞ்சின அலமர , வஞ்சிக்
கூல மா மரத்து இருஞ்சிறை புலர்த்துவ குரண்டம் . - 4.1.19
3830 - அங்கு ஒர் பாகத்தில் , அஞ்சன மணி நிழல் அடையப் ,
பங்கு பெற்று அதில் , பதுமராகத்து ஒளி பாயக் ,
கங்குலும் பகலும் எனப் பொலிவு எய்து கரைய ;
மங்கைமார் தடமுலை எனப் பொலிவன வாளம் . - 4.1.20
3831 - வலி நடத்திய வாள் என வாளைகள் பாய ,
ஒலி நடத்திய திரை தொறும் உகள்வன நீர்நாய் ,
கலிநடக் கழைக் கண்ணுளர் என நடம் கவினப்
பொலிவு உடைத்து எனத் தேரைகள் புகழ்வன போலும் . - 4.1.21
3832 - இராமன் சீதையை நினைந்து புலம்புதல் (3832-3843)
அன்னது ஆகிய அகன் புனல் பொய்கையை அணுகிக்
கன்னி அன்னமும் கமலமும் முதலிய கண்டான் ,
தன்னின் நீங்கிய தளிர் இயற்கு உருகினன் தளர்வான் ,
உன்னும் நல் உணர்வு ஒடுங்கிடப் புலம்புதல் உற்றான் . - 4.1.22
3833 - வரி ஆர் மணிக் கால் வாளமே !
மட அன்னங்காள் எனை நீங்கத்
தரியாள் நடந்தாள் ; இல்லளேல் ,
தளர்ந்த போதுந் தகைவேயோ ?
எரியா நின்ற ஆர் உயிருக்கு
இரங்கினால் , ஈது இசையன்றோ !
பிரியாது இருந்தீர் ஒரு மாற்றம்
பேசில் பூசல் பெரிது ஆமோ ? - 4.1.23
3834 - வண்ண நறும் தாமரை மலரும்
வாசக் குவளை நாண் மலரும் .
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம்
பொதியும் மருந்தின் தரும் பொய்காய் !
கண்ணும் முகமும் காட்டுவாய் ;
வடிவும் ஒருகால் காட்டாயோ ?
ஒண்ணும் என்னின் அ•து உதவாது
உலோவினாரும் உயர்ந்தாரோ ? - 4.1.24
3835 - விரிந்த குவளை செம் ஆம்பல்
விரைமென் கமலம் கொடிவள்ளை
தரங்கம் நெருங்கு வரால் ஆமை
என்று இத்தகையதமை நோக்கி ,
மருந்தின் அனையாள் அவயவங்கள்
அவை நின்கண்டேன் ; வல் அரக்கன்
அருந்தி அகல்வான் சிந்தினவோ ?
ஆவி ! உரைத்தி ஆம் அன்று ஏ . - 4.1.25
3836 - ஓடாநின்ற களி மயிலே !
சாயற்கு ஒதுங்கி , உள் அழிந்து
கூடாதாரில் திரிகின்ற
நீயும் ஆகம் குளிர்ந்தாயோ !
தேடா நின்ற என் உயிரைத்
தெரியக் கண்டாய் ! சிந்தை உவந்து
ஆடா நின்றாய் , ஆயிரம் கண்
உடையாய்க்கு ஒளிக்குமாறு உண்டோ ? - 4.1.26
3837 - அடையீர் எனினும் ஒரு மாற்றம்
அறிந்தது உரையீர் அன்னத்தின்
பெடையீர் ! ஒன்றும் பேசீரோ ?
பிழையா தேற்குப் பிழைத்தீரோ !
நடைநீர் அழியச் செய்தாரே
நடு இலாதார் ; நனி அவரோடு
உடையீர் பகைதான் , உமை நோக்கி
உவக்கின்றேனை முனிவீரோ . - 4.1.27
3838 - பொன் பால் பொருவும் விரை அல்லி
புல்லிப் பொலிந்த பொலம் தாது
தன்பால் தழுவும் குழல் வண்டு
தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே !
என்பால் இல்லை ; அப்பாலோ
இருப்பாரல்லர் ; விருப்பு உடைய
உன்பால் இல்லை என்றபோது
ஒளிப்பாரோடும் உறவு உண்டோ ? - 4.1.28
3839 - ஒரு வாசகத்தை வாய் திறந்திட்டு
உதவாப் பொய்கைக் குவிந்து ஒடுங்கும்
திருவாய் அனைய சேதாம்பற்கு
அயலே கிடந்த செம்கிடையே !
வெருவாது எதிர் நின்று அமுது உயிர்த்து
விளங்கும் செவ்விக் கொழும் கனிவாய்
தருவாய் , அவ் வாய் முகிழ் நகையும்
தண் என் மொழியும் தாராயோ . - 4.1.29
3840 - அலம் கண் உற்றேற்கு உற்று உதவற்கு
அடைவு உண்டன்றோ ! கொடிவள்ளாய் !
மலர்க் கொம்பு அனைய மடச் சீதை
காதே , மற்றொன்று அல்லை ; ஆல்
பொலக் குண்டலமும் கொடும் குழை உம்
புனைதாழ் முத்தின் பொன்தோடும்
விலக்கி வந்தாய் காட்டாயோ ?
இன்னும் பூசல் விரும்புதியோ ? - 4.1.30
3841 - பஞ்சு பூத்த விரற் பதுமம்
பவளம் பூத்த அடியாள் என்
நெஞ்சு பூத்த தாமரையின்
நிலையம் பூத்தாள் , நிறம் பூத்த
மஞ்சு பூத்த மலர் பூத்த
குழலாள் கண்போல் மணிக் குவளாய் !
நஞ்சு பூத்தது ஆம் அன்ன
நகையால் என்னை நலிவாயோ . - 4.1.31
3842 - என்று அயா உயிர்க்கின்றவன் , ஏடு அவிழ்
கொன்றை ஆவிப் புறத்து இவை கூறி , யான்
பொன்ற யாதும் புகல்கிலை போலும் ஆல்
வன் தயா இலி என்று வருந்தினான் . - 4.1.32
3843 - வார் அளித் தழை மாப் பிடி வாய் இடை
கார் அளிக் கலுழிக் கரும் கை மலை
நீர் அளிப்பது நோக்கினன் நின்றனன்
பேர் அளிக்குப் பிறந்த இல் ஆயினான் . - 4.1.33
3844 - இலக்குவன் இராமனை மாலைக்கடன் இறுக்குமாறு தூண்டுதல்
ஆண்டு அவ் வள்ளலை அன்பு எனும் ஆர் அணி
பூண்ட தம்பி போழுது கழிந்ததால்
ஈண்டு இரும் புனல் தோய்ந்து உன் இசை என
நீண்டவன் கழல் தாழ் நெடியோய் என்றான் . - 4.1.34
3845 - இராமன் நீராடி மாலைக்கடனிறுத்தல் (3845-3847)
அரைசும் அவ் வழி நின்று அரிது ஏகி அத்
திரை செய் தீர்த்தமும் செய் தவம் உண்மையால்
வரை செய் மும்முத வாரணம் நாண் உற
விரைசெய் பூ புனல் ஆடலை மேயினான் . - 4.1.35
3846 - நீத்த நீரில் நெடியவன் மூழ்கலும்
தீத்த காமத் தெறு கதிர் தீயினால்
காய்த்து இரும்பைக் கருமகக் கம்மியன்
தோய்த்த தண் புனல் ஒத்தது தோயமே . - 4.1.36
3847 - ஆடினான் அன்னமாய் அருமறைகள் பாடினான் ,
நீடுநீர் முன்னை நூல் நெறி முறையின் நேமிதாள் ,
சூடினான் முனிவர் தம் தொகுதிசேர் சோலைவாய்
மாடுதான் வைகினான் ; எரி கதிர் உம் வைகினான் . - 4.1.37
3848 - மதி தோன்றுதல்
அந்தியாள் வந்து , தான் அணுக , அங்கு அணுகு உறாச்
சந்தம் ஆர் கொங்கையாள் தனிமைதான் நாயகன்
சிந்தியா நொந்து தேய்பொழுது தெறு சீத நீர்
இந்து வான் உந்துவான் எரி கதிரினான் என . - 4.1.38
3849 - இரவில் யாவும் துயில இராமன் துயிலாமை (3849-3850)
பூ ஒடுங்கின ; விரவு புள் ஒடுங்கின , பொழில்கள் ;
மா ஒடுங்கின ; மரனும் இலை ஒடுங்கின ; கிளிகள் ,
நா ஒடுங்கின ; மயில்கள் நடம் ஒடுங்கின ; குயில்கள்
கூ ஒடுங்கின ; பிளிறு குரல் ஒடுங்கின களிறு . - 4.1.39
3850 - மண் துயின்றன ; நிலைய மலை துயின்றன ; மறு இல்
பண் துயின்றன ; விரவு பணி துயின்றன ; பகரும்
விண் துயின்றன ; கழுதும் விழி துயின்றன ; பழுது இல்
கண் துயின்றில , நெடிய கடல் துயின்றது ஒர் களிறு . - 4.1.40
3851 - சூரியன் உதித்தல்
பொங்கி முற்றிய உணர்வு புணர்தலும் பகையினொடு
பங்கம் உற்று அளவு இல் வினை பரிவு உறும் படி முடிவு இல்
கங்குல் இற்றது கமலம் முகம் எடுத்தன ; கடலில்
வெம் கதிர்க் கடவுள் எழ , விமலன் வெம் துயரின் எழ . - 4.1.41
3852 - இராம இலக்குவர் சீதையைத் தேடிச் செல்லுதல்
காலையே கடிது நெடிது ஏகினார் கடல் கவினு
சோலை ஏய் மலை தழுவு கான நீள் நெறி தொலைய
ஆலை ஏய் துழனி அகன் நாடர் ஆர்கலி அமிழ்து
போலவே உரை செய் புன மானை நாடுதல் , புரிஞர் . - 4.1.42
4.2 . அனுமப் படலம் (3853 -3887 )
3853 - இராம இலக்குவர் வருவதைக் கண்டு சுக்கிரீவன் ஓடி ஒளிதல் (3853-3854)
எய்தினார் , சவரி , நெடிது ஏய மால்வரை எளிதின் ;
நொய்தின் ஏறினர் அதனின் ; நோன்மை சால் கவி அரசு ,
செய்வது ஓர்கிலன் , 'இவர்கள் தெவ்வராம் ' என வெருவி ,
'உய்தும் நாம் ' என , விரைவின் ஓடினான் , மலை முழையின் . - 4.2.1
3854 - அமைச்சர் அனுமனை ஏவி ஒளிதல்
காலின் மா மதலை ! இவர் காண்மினோ ! கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம் ; வரிசிலையர் ;
நீல மால் வரை அனையர் ; நீதியா நினைமின் என ,
மூலம் ஓர்கிலர் , மறுகி ஓடினார் , முழை அதனின் . - 4.2.2
3855 - அனுமன் அவரை அஞ்சல் என்றல்
அவ் இடத்து , அவர் மறுகி , அஞ்சி , நெஞ்சு அழி அமைதி ,
வெம் விடத்தினை மறுகு தேவர் , தானவர் , வெருவல்
தவ்விடத் , தனி அருளு தாழ்சடைக் கடவுள் என ,
'இவ் இடத்து இனிது இருமின் ; அஞ்சல் ' என்று இடை உதவி . - 4.2.3
3856 - அனுமன் இராம இலக்குவரைக் கண்டுணர்தல்
அஞ்சனைக்கு ஒரு சிறுவன் , அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி , ஒரு மாணவப் படிவமொடு ,
'வெஞ்சமத் தொழிலர் , தவம் மெய்யர் , கை சிலையர் ' என ,
நெஞ்சு அயிர்த்து , அயல் மறைய நின்று , கற்பினின் நினையும் . - 4.2.4
3857 - அனுமன் உய்த்துணர்ச்சி (3857-3860)
'தேவருக்கு ஒருதலைவர் ஆம் முதல் தேவர் எனின் ,
மூவர் ; மற்று , இவர் இருவர் ; மூரிவில் கரர் ; இவரை
யாவர் ஒப்பவர் , உலகின் ? யாது இவர்க்கு அரிய பொருள் ?
கேவலம் அத்து இவர் நிலைமை தேர்வது எ கிழமை கொடு ? ' - 4.2.5
3858 - சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத் , தெருமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர் ; நோவுறச் சிறியர் அலர் ;
அந்தரத்து அமரர் அலர் ; மானிடப் படிவர் ; மயர்
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறும் நிலையர் . - 4.2.6
3859 - 'தருமமும் , தகவும் , இவர் தனம் எனும் தகையர் ; இவர் ,
கருமமும் பிறிது ஒர்பொருள் கருதி அன்று ; அது கருதின் ,
அரும் மருந்து அனையது , இடை அழிவு வந்து உளது ; அதனை ,
இரு மருங்கினும் , நெடிது துருவுகின்றனர் , இவர்கள் ' . - 4.2.7
3860 - 'கதம் எனும் பொருண்மை இலர் ;
கருணையின் கடல் அனையர் ;
இதம் எனும் பொருள் அலது , ஒர்
இயல்பு உணர்ந்திலர் இவர்கள் ;
சதமன் அஞ்சுறும் நிலையர் ;
தருமன் அஞ்சுறு சரிதர் ;
மதனன் அஞ்சுறு வடிவர் ;
மறலி அஞ்சுறு விறலர் . - 4.2.8
3861 - அனுமனின் அன்புணர்ச்சி
என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி ,
அன்பினின் , உருகுகின்ற உள்ளத்தன் , ஆர்வத்தோரை
முன் பிரிந்து அனையர் தம்மை முன்னினான் என்ன நின்றான்
தன் பெருங் குணத்தால் தன்னைத் தான் அலது ஒப்பு இலாதான் . - 4.2.9
3862 - அனுமான் , விலங்கின் அன்பைக் கண்டு வியத்தல்
'தன் கன்று கண்ட அன்ன
தன்மைய , தறுகண் பேழ்வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா ,
வேங்கை என்று இனையவேயும் ,
பின் சென்று , காதல் கூரப்
பேழ்கணித்து இரங்குகின்ற ;
என் கன்றுகின்றது எண்ணிப்
பற்பல இவரை ? அம்மா ! ' - 4.2.10
3863 - பறவை , மேகம் பணிபுரிதல்
'மயில் முதல் பறவை எல்லாம் , மணி நிறம் அத்து இவர்கள் மேனி
வெயில் உறற்கு இரங்கி மீதா , விரி சிறை பந்தர் வீசி
எயில் வகுத்து எய்துகின்ற ; விண் முகில் கணங்கள் எங்கும்
பயில்வு உற , திவலை சிந்திப் பயப் பயத் தழுவும் , பாங்கர் ' . - 4.2.11
3864 - நிலைத்திணைப் பொருள்களின் நெகிழ்ச்சி
'காய் எரி கனலும் கற்கள் ,
கள் உடை மலர்களே போல் ,
தூய செங்கமல பாதம்
தோய் தொறும் குழைந்து தோன்றும் ;
போயின திசைகள் தோறும் ,
மரனொடு புல்லும் எல்லாம்
சாய்வுறும் , தொழுவபோல் ; இங்கு ,
இவர்களோ தருமம் ஆவார் ? ' - 4.2.12
3865 - அனுமான் தன் அன்பிற்குக் காரணம் ஆராய்தல்
துன்பினைத் துடைத்து , மாயத்
தொல் வினை தன்னை நீக்கித்
தென்புலத்து அன்றி , மீளா
நெறி உய்க்கும் தேவரோ தாம் ?
என்பு நெக்கு உருகுகின்றது ;
இவர்கின்றது அளவு இல் காதல் ;
அன்பினுக்கு அவதி இல்லை ;
அடைவு என்கொல் ? அறிதல் தேற்றேன் . - 4.2.13
3866 - அனுமன் எதிர் சென்று வரவேற்றல்
இ வழி எண்ணி , ஆண்டு , அவ் இருவரும் எய்தலோடும் ,
செம் வழி உள்ளத் தானும் , தெரிவு உற எதிர்சென்று எய்திக்
'கவ்வை இன்றாக , நுங்கள் வரவு ! ' எனக் , கருணையோனும் ,
எ வழி நீங்கியோய் ? நீயார் ? என , விளம்பல் உற்றான் . - 4.2.14
3867 - அனுமன் விடை (3867-3868)
'மஞ்சு எனத் திரண்ட கோல
மேனிய ! மகளிர்க்கு எல்லாம்
நஞ்சு எனத் தகைய ஆகி ,
நளிர் இரும் பனிக்குத் தேம்பாக்
கஞ்சம் ஒத்து அலர்ந்த செய்ய கண்ண !
யான் காற்றின் வேந்தற்கு
அஞ்சனை வயிற்றில் வந்தேன் ;
நாமமும் அனுமன் என்பேன் ; ' - 4.2.15
3868 - 'இம் மலை இருந்து வாழும் எரிகதிர்ப் பரிதிச் செல்வன்
செம்மலுக்கு ஏவல் செய்வேன் ; தேவ ! நும்வரவு நோக்கி
விம்மல் உற்று அனையன் ஏவ , வினவிய வந்தேன் ' என்றான் -
எ மலை குலமும் தாழ , இசை சுமந்து , எழுந்த தோளான் . - 4.2.16
3869 - இராமன் அனுமனைத் தனக்குள் பாராட்டுதல்
மாற்றம் அஃது உரைத்தலோடும் ,
வரிசிலைக் குரிசில் மைந்தன்
தேற்றம் உற்ற , இவனின் ஊங்குச்
செவ்வியோர் இன்மை தேறி ,
'ஆற்றலும் , நிறையும் , கல்வி
அமைதியும் , அறிவும் , என்னும்
வேற்றுமை இவனோடு இல்லையாம் '
என , விளம்பலுற்றான் . - 4.2.17
3870 - இராமன் இலக்குவனிடம் அனுமனைப் புகழ்தல் (3870-3871)
`'இல்லாத உலகத்து எங்கும்
ஈங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் , வேதக்
கடலுமே '' என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே ?
யார்கொல் இச்சொல்லின் செல்வன் ?
வில் ஆர் தோள் இளைய ! வீர ! –
விரிஞ்சனோ ? விடை வலான் ஓ ? - 4.2.18
3871 - மாணி ஆம் படிவம் அன்று ,
மற்று இவன் வடிவம் ; மைந்த !
ஆணி இவ் உலகுக்கு எல்லாம்
என்னலாம் ஆற்றற்கு ஏற்ற
சேண் உயர் பெருமை தன்னைச்
சிக்கு அறத் தெளிந்தேன் ; பின்னர்க்
காணுதி மெய்ம்மை என்று ,
தம்பிக்குக் கழறிக் , கண்ணன் . - 4.2.19
3872 - இராமன் சுக்கிரீவனைக் காட்டுமாறு கூறல்
'எவ்வழி இருந்தான் , சொன்ன கவி குலம் அத்து அரசன் யாங்கள்
அவ்வழி அவனைக் காணும் அருத்தியால் அணுக வந்தேம் ;
இவ்வழி நின்னை உற்ற எமக்கு நீ இன்று சொன்ன
செவ்வழி உள்ளத் தோனைக் காட்டுதி , தெரிய ' என்றான் . - 4.2.20
3873 - அனுமன் பாராட்டு
'மாதிரப் பொருப்பு ஓடு ஓங்கு
வரம்பு இலா உலகின் , மற்றுப்
பூதரப் புயத்து வீரர்
நும் ஒக்கும் புனிதர் யாரே ?
ஆதரித்து அவனைக் காண்டற்கு
அணுகினிர் என்னின் , அன்னான் ,
தீது அவித்து அமையச் செய்த ,
செய்தவச் செல்வம் நன்றே ! ' - 4.2.21
3874 - அனுமன் சுக்கிரீவனுடைய வரலாறு கூறுதல்
'இரவிதன் புதல்வன் தன்னை ,
இந்திரன் புதல்வன் என்னும்
பரிவு இலன் சீறப் , போந்து ,
பருவரற்கு ஒருவன் ஆகி ,
அருவி அம் குன்றின் , என்னோடு
இருந்தனன் ; அவன்பால் செல்வம்
வருவது ஓர் அமைவின் வந்தீர்
வரையினும் வளர்ந்த தோளீர் ! ' - 4.2.22
3875 - அஞ்சினர்க்கு அடைக்கலம் கொடுத்தலின் சிறப்புக் கூறியது (3875-3876)
'ஒடுங்கல் இல் உலகம் யாவும்
உவந்தன உதவி , வேள்வி
தொடங்கின , மற்றும் , முற்றத்
தொல் அறம் துணிவர் அன்றே ,
கொடும் குலம் பகைஞன் ஆகிக்
கொல்லிய வந்த கூற்றை
நடுங்கினர்க்கு அபயம் நல்கும்
அதனினும் , நல்லது உண்டோ ? ' - 4.2.23
3876 - ‘’ எம்மையே காத்திர் '' என்றல்
எளிது அரோ ! இமைப்பு இலாதோர்
தம்மையே முதலிட்டு , ஆன்ற
சராசரம் சமைத்த ஆற்றல்
மும்மை ஏழ் உலகும் காக்கும்
முதல்வர்நீர் ; முருகற் செவ்வி
உம்மையே புகல் புக்கேமுக்கு ,
இதின் வரும் உறுதி உண்டோ ? - 4.2.24
3877 - அனுமன் விரும்பியவாறு இலக்குவன் தம் வரலாறு கூறல் (3877-3880)
'யார் என விளம்புகேன் நான் ,
எம்குலத் தலைவற்கு , உம்மை ?
வீரர் ! நீர் பணித்திர் ! ' என்றான் ,
மெய்ம்மையின் வேலி போல்வான் ;
வார்கழல் இளைய வீரன் ,
மரபுளி , வாய்மை யாதும்
சோர்வு இலன் , நிலைமை எல்லாம்
தெரிவுறச் சொல்லல் உற்றான் . ' - 4.2.25
3878 - சூரியன் மரபில் தோன்றிச் சுடர்நெடு நேமி ஆண்ட
ஆரியன் ; அமரர்க்கு ஆகி அசுரரை ஆவி உண்ட
வீரியன் ; வேள்வி செய்து விண் உலகோடும் ஆண்ட ,
காரியன் ; கருணை அன்ன கண்ணன் அக்கவிகை மன்னன் . - 4.2.26
3879 - 'புயல் தரும் மதம் திண் கோட்டுப்
புகர் மலைக்கு இறையை ஊர்ந்து ,
மயல் தரும் அவுணர் யாரும்
மடிதர , வரிவில் கொண்ட
இயல் தரும் புலமைச் செங்கோல்
மனு முதல் யாரும் ஒவ்வாத்
தயரதன் , கனக மாடத்
தட மதில் அயோத்தி வேந்தன் . ' - 4.2.27
3880 - 'அன்னவன் சிறுவன் ஆம் ,
இவ் ஆண் தகை ; அன்னை ஏவ ,
தன்னுடை உரிமைச் செல்வம்
தம்பிக்குத் தகவின் நல்கி ,
நல் நெடுங் கானம் சேர்ந்தான் ;
நாமமும் இராமன் என்பான் ;
இந் நெடுஞ் சிலை வலானுக்கு
ஏவல் செய் அடியன் யானே . ' - 4.2.28
3881 - இலக்குவன் சொல்லைக் கேட்ட அனுமன் இராமனை வணங்குதல்
என்று , அவன் தோற்றம் ஆதி
இராவணன் இழைத்த மாயப்
புன் தொழில் இறுதி ஆகப் ,
புகுந்து உள பொருள்கள் எல்லாம் ,
ஒன்றும் ஆண்டு ஒழிவு உறாமல் ,
உணர்த்தினன் ; உணர்த்தக் கேட்டு ,
நின்ற அக் காலின் மைந்தன் ,
நெடிது உவந்து , அடியில் தாழ்ந்தான் . - 4.2.29
3882 - அனுமன் தானும் வானர இனத்தினன் என்றல்
தாழ்தலும் , 'தகாத செய்தது
என்னை நீ ? தருமம் அன்றால் ;
கேள்வி நூல் மறை வலாளா ! '
என்றனன் ; என்னக் கேட்ட
பாழி அம் தடந்தோள் வீர
மாருதி , 'பதுமச் செங்கண்
ஆழியாய் ! அடியேன் தானும்
அரிக் குலத்து ஒருவன் ' என்றான் . - 4.2.30
3883 - அனுமன் பேருருக் கொண்டு நிற்றல் (3883-3884)
மின் உருக் கொண்ட வில்லோர்
வியப்புற , வேத நன்னூல்
பின் உருக் கொண்டது என்னும்
பெருமை ஆம் பொருளும் நாணப் ,
பொன் உருக் கொண்ட மேரு ,
புயத்திற்கும் உவமை போதாத்
தன் உருக் கொண்டு நின்றான் ,
தருமத்தின் தனிமை தீர்ப்பான் . - 4.2.31
3884 - கண்டிலன் , உலகம் மூன்றும்
காலினால் கடந்து கொண்ட
புண்டரிகக் கண் ஆழிப்
புரவலன் , பொலன் கொள் சோதி
குண்டல வதனம் என்றால் ,
கூறலாம் தகைமைத்து ஒன்றோ
பண்டை நூல் கதிரோன் சொல்லப்
படித்தனன் படிவம் ? அம்மா . - 4.2.32
3885 - இராமன் இலக்குவனுக்கு அனுமன் வடிவத்தை வியந்து கூறல் (3885-3886)
தாள் படாக் கமலம் அன்ன
தடங்கணான் , தம்பிக்கு , 'அம்ம !
கீழ்ப் படா நின்ற நீங்கி ,
கிளர்படாது ஆகி , என்றும்
நாட் படா மறைகளாலும் ,
நவை படா ஞானத்தாலும் ,
கோட்படாப் பதமே , ஐய !
குரக்கு உருக்கொண்டது ' என்றான் . - 4.2.33
3886 - நல்லன நிமித்தம் பெற்றேம் ;
நம்பியைப் பெற்றேம் ; நம்பால்
இல்லையே துன்பம் ஆனது ;
இன்பமும் எய்திற்று ; இன்னும் ,
வில்லினாய் ! இவனைப் போலாம்
கவிக்குலக் குரிசில் வீரன்
சொல்லினால் ஏவல் செய்வான் ;
அவன் நிலை சொல்லற் பாற்றோ ? - 4.2.34
3887 - அனுமன் சுக்கிரஈவனைக் கொணரச் செல்லல்.
என்று , அகம் உவந்து , கோல
முகம் மலர்ந்து , இமையா நின்ற
குன்று உறழ் தோளினாரை
நோக்கி , அக்குரக்குச் சீயம் ,
‘’ சென்று அவன் தன்னை , இன்னே
கொணர்கின்றேன் ; சிறிது போது
வென்றியிர் ! இருத்திர் '' என்று
விடைபெற்று விரைவில் போனான் . - 4.2.35
4.3 . நட்புக் கோட் படலம் (3888-3966 )
3888 - அனுமன் மகிழ்ச்சி புலப்படச் சுக்கிரீவனை அணுகுதல்
போனவன் திரள் மணி புய நெடும் புகழினான்
ஆன , தன் , பொருசினத்து அரசன்மாடு அணுகினான் ;
'யானும் உன்குலமும் இவ் உலகும் உய்ந்தனம் ' எனா ,
மானவன் குணம் எலாம் நினையும் மா மகிழ்வினான் . - 4.3.1
3889 - வாலிக்குக் காலன் வந்தான் எனல்
மேலவன் திரு மகன் கு உரை செய்தான் , 'விரை செய்தார்
வாலி என்று அளவு இலா வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன் ; இடர்க்கடல் கடந்தனம் ' எனா
ஆலம் உண்டவனின் நின்று அருநடம் புரிகுவான் . - 4.3.2
3890 - அனுமன் , இராம இலக்குவர் இயல்பை விளக்குதல்
'மண் உளார் , விணுளார் , மாறு உளார் , வேறு உளார் ,
எண் உளார் , இயலுளார் , இசை உளார் , திசை உளார்
கண் உளார் ஆயினார் ; பகை உளார் , கழிநெடும்
புண் உளார் ஆருயிர்க்கு அமிழ்தமே போல் உளார் . - 4.3.3
3891 - அனுமன் , இராமன் வரலாறு கூறல் (3891-3901)
'சூழி மால் யானையார் தொழுகழல் தயரதன்
பாழியால் உலகு எலாம் ஒருவழிப் படர வாழ்
ஆழியான் , மைந்தர் ; பேர் அறிவினார் ; அழகினார் ;
ஊழியார் எளிது உனக்கு அரசுதந்து உதவுவார் . - 4.3.4
3892 - 'நீதியார் ; கருணையின் நெறியினார் ; நெறிவயின்
பேதியா நிலைமையார் ; எவரினும் பெருமையார் ;
போதியாது அளவு இலா உணர்வினார் ; புகழினார் ;
காதிசேய் தருகடல் கடவுள்வெம் படையினார் . - 4.3.5
3893 - வேல் இகல் சினவு தாடகை விளிந்து உருள வில்
கோலி அக்கொடுமையாள் புதல்வனைக் கொன்று தன்
கால் இயல் பொடியினால் , நெடிய கற் படிவம் ஆம்
ஆலிகைக்கு அரிய பேர் உருவு அளித்து அருளினான் . - 4.3.6
3894 - 'நல் உறுப்பு அமையும் நம்பியரில் முன்னவன் நயந்து ,
எல் உறுப்பு அரிய பேர் எழுசுடர்க் கடவுள் தன்
பல் இறுத்தவன் வலிக்கு அமை தியம்பகம் எனும்
வில் இறுத்தருளினான் - மிதிலை புக்கு கனைய நாள் . - 4.3.7
3895 - 'உளை வயம் புரவியான் உதவ உற்று , ஒரு சொலால் ,
அளவு இல் கற்புடைய சிற்றவை பணித்து அருளலால் ,
வளை உடை புணரிசூழ் மகிதலத் திரு எலாம்
இளையவற்கு உதவி , இ தலை எழுந்தருளினான் . - 4.3.8
3896 - தெவ் இரா வகை நெடுஞ் சிகை விரா மழுவினான்
அவ் இராமனையும் மா வலி தொலைத் தருளினான் ,
இவ் இராகவன் ; வெகுண்டு எழும் இரா அனையன் ஆம்
அவ் விராதனை இராவகை துடைத்தருளினான் . - 4.3.9
3897 - 'கரன் முதல் கருணை அற்றவர் , கடல் படை ஒடு உம்
சிரம் உகச் சிலை குனித்து உதவுவான் ; திசை உளார்
பரம் உகப் பகை துமித்து அருளுவான் ; பரமர் ஆம்
அரன் முதல் தலைவருக்கு அதிசயத் திறலினான் . - 4.3.10
3898 - ஆயம் மால் நாகர் தாழ் ஆழியானே அலால் ,
காயம் மான் ஆயினான் யாவனே ? காவலா !
நீ அ(ம்)மால் நேர்தியால் , நேரில் மாரீசன் ஆம்
மாய மான் ஆயினான் மாய , மான் ஆயினான் . - 4.3.11
3899 - உக்க அந்தமும் உடல் பகை துறந்து உயர் பதம்
புக்க அந்தமும் , நமக்கு உரை செயும் புரையவோ -
திக்க அந்தர நெடுந் திரள் கரம் சினவு தோள் ,
அக் கவந்தனும் நினைந்து அமரர் தாழ் சவரிபோல் . - 4.3.12
3900 - 'முனைவரும் பிறரும் மேல் , முடிவு அரும் பகல் எலாம் ,
இனையர் வந்துறுவர் என்று : இயல்தவம் புரிகுவார் ,
வினை எனும் சிறை துறந்து உயர்பதம் விரவினார்
எனையர் என்று உரை செய்கேன் ? - இரவிதன் சிறுவனே ! - 4.3.13
3901 - 'மாயையால் மதி இலா நிருதர்கோன் , மனைவியைத்
தீய கான் நெறியின் உய்த்தனன் ; அவள் தேடுவார் .
நீ ஐயா , தவம் இழைத்து உடைமை யால் நெடுமனம் ,
தூயையா உடைமையால் , உறவினைத் துணிகுவார் . - 4.3.14
3902 - 'தந்திருந்தனர் அருள் ; தகை நெடும் பகைஞன் ஆம்
இந்திரன் சிறுவனுக்கு இறுதி இன்று இசைதரும் ;
புந்தியின் பெருமையாய் ! போதர் ' என்று உரை செய்தான்
மந்திரம் கெழுமும் நூல் மரபு உணர்ந்து உதவுவான் . - 4.3.15
3903 - அனுமனோடு சுக்கிரீவன் இராமனை யடைதல்
அன்ன ஆம் உரை எலாம் அறிவினால் உணர்குவான் ,
'உன்னையே உடைய எற்கு அரியது எ பொருள் அரோ ?
பொன்னையே பொருவுவாய் ! போது ' எனப் போதுவான்
தன்னையே அனையவன் சரணம் வந்து அணுகினான் . - 4.3.16
3904 - கண்டனன் என்ப மன்னோ - கதிரவன் சிறுவன் , காமர்க்
குண்டலம் துறந்த கோல வதனமும் , குளிர்க்கும் கண்ணும்
புண்டரிகங்கள் பூத்துப் புயல் தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த மரகதக் கிரி அனானை . - 4.3.17
3905 - நோக்கினான் ; நெடிது நின்றான் ;
'நெடிவு அருங் கமலத்து அண்ணல்
ஆக்கிய உலகம் எல்லாம்
அன்று தொட்டு இன்று காறும்
பாக்கியம் புரிந்த எல்லாம்
குவிந்து இரு படிவ மாகி
மேக்கு உயர் தடந்தோள் பெற்று
வீரர் ஆய் விளைந்த ' என்பான் . - 4.3.18
3906 - தேறினன் - அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே ,
மாறி , இ பிறப்பில் வந்தார் மானுடர் ஆகி மன்னோ ;
ஆறுகொள் சடிலத் தானும் , அயனும் என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம் , மானுடம் வென்றது ' என்றே . - 4.3.19
3907 - வந்த சுக்கிரீவனை இராமன் வரவேற்றல்
என நினைந்து இனைய எண்ணி ,
இவர்கின்ற காதல் ஓதக்
கனைகடல் கரை நின்று ஏறாக்
கண் இணை களிப்ப நோக்கி ,
அனகனைக் குறுகினான் ; அவ்
அண்ணலும் , அருத்தி கூர ,
புனை மலர் தடக்கை நீட்டிப் ,
'போந்து இனிது இருத்தி ' என்றான் . - 4.3.20
3908 - இருவரும் ஒருங்கிருந்த காட்சி (3908-3909)
தவா வலி அரக்கர் என்னும் தகா இருள் பகையைத் தள்ளிக் ,
குவால் அறம் நிறுத்தற்கு ஏற்ற காலத்தின் கூட்டம் ஒத்தார் ;
அவா முதல் அறுத்த சிந்தை அனகனும் , அரியின் வேந்தும் ,
உவா உற வந்து கூடும் உடுபதி இரவி , ஒத்தார் . - 4.3.21
3909 - கூட்டம் உற்று இருந்த வீரர் ,
குறித்தது ஓர் பொருட்டு முன்னாள்
ஈட்டிய தவமும் , பின்னர்
முயற்சியும் இயைந்தது ஒத்தார் ;
வீட்டு வாள் அரக்கர் என்னும்
தீவினை வேரின் வாங்கக் ,
கேட்டு உணர் கல்வியோடு
ஞானமும் கிடைத்தது ஒத்தார் . - 4.3.22
3910 - சுக்கிரீவன் இராமனைப் பாராட்டுதல்
ஆயது ஓர் அவதியின்கண் , அருக்கன் சேய் , அரசை நோக்கி ,
'தீவினை தீய நோற்றார் என்னின் யார் ? செல்வ ! நின்னை -
நாயகன் உலகுக்கு எல்லாம் என்னலாம் நலம் மிக்கோயை
மேயினன் ; விதியே நல்கின் மேவல் ஆகாது என் ? என்றான் . - 4.3.23
3911 - இராமன் வந்த வரலாற்றைக் கூறுதல்
'மை அறு தவத்தின் வந்த சவரி , இம்மலையில் நீ வந்து
எய்தினை இருந்த தன்மை , இயம்பினள் ; யாங்கள் உற்ற
கை அறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம் ;
ஐய ! நின்தீரும் ' என்ன , அரி குலம் அத்து அரசன் சொல்வான் . - 4.3.24
3912 - சுக்கிரீவன் தன் வரலாறு கூறிச் சரண்புகல்
'முரண் உடை தடக்கை ஓச்சி , முன்னவன் , பின் வந்தேனை ,
இருள் நிலை புறத்தின் காறும் , உலகு எங்கும் தொடர , இ குன்று
அரண் உடைத்தாக உய்ந்தேன் ; ஆர் உயிர் துறக்கலாற்றேன் ,
சரண் உனைப் புகுந்தேன் என்னைத் தாங்குதல் தருமம் ' என்றான் . - 4.3.25
3913 - இராமன் சுக்கிரீவனை நண்பனாகக் கொள்ளுதல் (3913-3914)
என்ற அக்குரக்கு வேந்தை , இராமனும் இரங்கி நோக்கி ,
'உன் தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள , முன் நாள்
சென்றன போக , மேல் வந்து உறுவன தீர்ப்பல் ; அன்ன
நின்றன எனக்கும் நிற்கும் நேர் ' என மொழியும் நேரா . - 4.3.26
3914 - 'மற்று , இனி உரைப்பது என்னே ?
வான் இடை மண்ணில் உன்னைச்
செற்றவர் என்னைச் செற்றார் ;
தீயரே எனினும் , உன்னோடு
உற்றவர் எனக்கும் உற்றார் ;
உன் கிளை எனது ; என் காதல்
சுற்றம் , உன் சுற்றம் ; நீ என்
இன் உயிர்த் துணைவன் ' என்றான் . - 4.3.27
3915 - இராமன் சுக்கிரீவனோடு நண்பு பூண்டமை யறிந்த வானரங்களின் மகிழ்ச்சி
ஆர்த்தது குரக்குச் சேனை ;
அஞ்சனை சிறுவன் மேனி ,
போர்த்தன , பொடித்த ரோமப்
புளகங்கள் ; பூவின் மாரி
தூர்த்தனர் விண்ணோர் ; மேகம்
சொரிந்தன ; அனகன் சொன்ன
வார்த்தை எ குலம் அத்து உளோர்க்கும் ,
மறையினும் மெய் என்று உன்னா . - 4.3.28
3916 - அனுமன் சுக்கிரீவனது மாளிகைக்கு அழைக்க இராமன் இசைதல்
ஆண்டு எழுந்து , அடியில் தாழ்ந்த
அஞ்சனை சிங்கம் , வாழி !
தூண் திரள் தடந்தோள் மைந்த !
தோழனும் நீயும் வாழி !
ஈண்டு நும் கோயில் எய்தி ,
இனிதின் நும் இருக்கை காண
வேண்டும் நும் அருள் என் ? என்றான் ,
வீரனும் 'விழுமிது ' என்றான் . - 4.3.29
3917 - சோலைக்குப் போதல்
ஏகினர் இரவி சேயும்
இருவரும் அரிகள் ஏறும்
ஊக வெம் சேனை சூழ ,
அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த ,
நாகமும் நரந்தக் காவும் ,
நளின வாவிகளும் நண்ணி ,
போக பூமியையும் ஏசும்
புது மரம் சோலை புக்கார் . - 4.3.30
3918 - சோலையின் சிறப்பு (3918-3919)
ஆரமும் அகிலும் துன்றி ,
அவிர் பளிக்கு அறை அளாவி ,
நாரம் நின்றன போல் தோன்றி ,
நவமணித் தடங்கள் நீடும்
பாரமும் மருங்கும் தெய்வத்
தருவு நீர்ப் பண்ணை ஆடும்
சூர் அரமகளிர் ஊசல்
துவன்றிய சும்மைத்து ; அன்றே . - 4.3.31
3919 - அயர்வு இல் கேள்விசால் அறிஞர் வேலைமுன் ,
பயில்வு இல் கல்வியார் பொலிவு இல் பான்மைபோல் ,
குயிலும் மா மணி குழுவு சோதியால் ,
வெயிலும் , வெள்ளி வெண் மதியும் , மேம்படா . - 4.3.32
3920 - பூவணையிலிருந்து உரையாடல்
ஏய அன்னது ஆம் இனிய சோலைவாய்
மேய மைந்தரும் , கவியின் வேந்தனும்
தூய பூ அணை பொலிந்து தோன்றினார் ,
ஆய அன்பினோடு அளவளாவுவார் . - 4.3.33
3921 - இராமன் நீராடி விருந்துண்ணல்
கனியும் , கந்தமும் , காயும் , தூயநன்கு
இனிய யாவையும் கொணர , யாரினும்
புனிதன் மஞ்சனத் தொழில்புரிந்து , பின்
இனிது இருந்து , நல் விருந்தும் ஆயினான் . - 4.3.34
3922 - இராமன் சுக்கிரீவனை வினாவுதல்
விருந்தும் ஆகி , அம் மெய்ம்மை அன்பினோடு
இருந்து நோக்கி , நொந்து , இறைவன் , சிந்தியா
பொருந்தும் நன் மனைக்கு உரிய பூவையைப்
பிரித்துளாய் கொலோ நீயும் ? பின் ! என்றான் . - 4.3.35
3923 - சுக்கிரீவன் நிலையை அனுமன் விளக்குதல்
என்ற வேலையில் எழுந்து , மாருதி ,
குன்று போல நின்று இருகை கூப்பினான் -
'நின்ற நீதியாய் ! நெடிது கேட்டியால் !
ஒன்று யான் உனக்கு உரைப்பது உண்டு ' எனா . - 4.3.36
3924 - வாலியின் பெருமை கூறல்
நாலு வேதம் ஆம் நவையில் ஆர்கலி
வேலி அன்ன தொல் மலையின்மேல் உளான் ,
சூலி தன் அருள் துறையில் முற்றினான்
வாலி என்று உளான் , வரம்பு இல் ஆற்றலான் . - 4.3.37
3925 - கழலும் தேவரோடு அவுணர் கண்ணின் நின்று ,
உழலும் மந்தரம் அத்து உருவு தேய , முன் ,
அழலும் கோள் அரா அகடு தீவிடச் ,
சுழலும் வேலையைக் கடையும் தோளினான் . - 4.3.38
3926 - நிலனும் , நீரும் , மா நெருப்பும் , காற்றும் , என்று
உலைவில் பூதம் நான்கு உடைய ஆற்றலான் ;
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின் நின்றும் இ மலையின் வாவுவான் . - 4.3.39
3927 - 'கிட்டுவார் பொரக் கிடைக்கின் , அன்னவர்
பட்ட நல்வலம் பாகம் எய்துவான் ;
எட்டு மாதிரம் அத்து இறுதி , நாளும் உற்று
அட்டம் மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான் ' - 4.3.40
3928 - கால் செலாது அவன் முன்னர் ; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில் ; வென்றியான்
வால் செலாத வாய் அலது , இராவணன்
கோல் செலாது ; அவன் குடை செலாது அரோ . - 4.3.41
3929 - மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே , அவன் பேருமேல் ; நெடும்
காரும் வானமும் , கதிரும் , நாகமும் ,
தூருமே , அவன் பெரிய தோள்களால் . - 4.3.42
3930 - பார் இடந்த வெம் பன்றி , பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான் ;
மார்பு இடந்த மா எனினும் , மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ . - 4.3.43
3931 - படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி , மீது
அடர்ந்து பாரம் வந்து உற , அனந்தனும்
கிடந்து தாங்கும் ; இ கிரியை மேயினான் ,
நடந்து தாங்கும் ; இ புவனம் நாள் எலாம் . - 4.3.44
3932 - கடல் ஒலிப்பதும் , கால் சலிப்பதும் ,
மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும் ,
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய் ! - அயலின் ஆபவோ ? - 4.3.45
3933 - 'வெள்ளம் ஏழுபத்து உள்ள , மேருவைத்
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான் ;
உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்
வள்ளலே ! அவன் வலியின் வண்மையால் . - 4.3.46
3934 - 'மழை இடிப்பு உறா ; வய வெஞ் சீயமா
முழை இடிப்பு உறா ; முரண் வெம் காலும் மென்
தழை துடிப்புறச் சார்வுறாது ' ; - அவன்
விழைவிடத்தின் மேல் , விளிவை அஞ்சலால் . - 4.3.47
3935 - 'மெய்க்கொள் வாலினால் , மிடல் இராவணன்
தொக்க தோள் உறத் தொடர் படுத்த நாள் ,
புக்கு இலாத - வெம் பொழி அரத்தம் நீர்
உக்கு இலாத - வேறு உலகம் யாவதோ . - 4.3.48
3936 - இந்திரன் தனிப் புதல்வன் , இன் அளிச்
சந்திரன் தழைத்த அனைய தன்மையான் ,
அந்தகன் தனக்கு அரிய ஆணையான் ,
முந்தி வந்தனன் இவனின் - மொய்ம்பினோய் ! - 4.3.49
3937 - 'அன்னவன் எமக்கு அரசன் ஆகவே
இன்னவன் இளம் பதம் இயற்றும் நாள்
முன்னவன் குலப் பகைஞன் - முட்டினான் -
மின் எயிற்று வாள் அவுணன் , வெம்மையான் . - 4.3.50
3938 - 'முட்டி நின்றவன் முரண் உரத்தினோடு
ஒட்ட , அஞ்சி , நெஞ்சு உலைய ஓடினான் ;
`'வட்ட மண் தலத்து அரிது வாழ்வு '' எனா ,
எட்டரும் பெரும் பிலனுள் எய்தினான் . ' - 4.3.51
3939 - 'எய்து காலை , “அ பிலன் உள் எய்தி , யான்
நொய்தின் அங்கு அவன் கொணர்வென் ; - நோன்மையாய் !
செய்தி , காவல் , நீ , சிறிது போழ்து '' எனா ,
வெய்தின் எய்தினான் , வெகுளி மேயினான் . ' - 4.3.52
3940 - “ஏகி வாலியும் இருது ஓர் ஏழொடு ஏழ்
வேக வெம் பிலம் தடவி , வெம்மையான்
மோக வென்றிமேல் முயல்வின் வைகிடச் ,
சோகம் எய்தினன் , துணை துளங்கினான் . '' - 4.3.53
3941 - 'அழுது அழுங்குறும் இவனை , அன்பினில்
தொழுது இரந்து ,”'நின் தொழில் இது ; ஆகலால் ,
எழுது வென்றியாய் ! அரசு செய்க '' எனப்
'பழுது இது ' என்றனன் , பரியும் நெஞ்சினான் . - 4.3.54
3942 - 'என்று , தானும் , “அவ்வழி இரும் பிலம்
சென்று , முன்னவன் - தேடுவேன் ; அவற்
கொன்று உளான் தனைக் கொல்வென் ; அன்று எனின் ,
பொன்று வேன் '' எனாப் , புகுதல் மேயினான் . ' - 4.3.55
3943 - தடுத்து வல்லவா தணிவு செய்து நோய்
கெடுத்து , மேலையோர் கிளத்து நீதியால்
அடுத்த காவலும் , அரிகள் ஆணையால்
கொடுத்தது உண்டு ; இவன் கொண்டனன் கொலாம் ? - 4.3.56
3944 - 'அன்ன நாளில் , மாயாவி , அ பிலம் அத்து ,
இன்ன வாயில் ஊடு எய்தும் என்ன , யாம் ,
பொன்னின் மால் வரை பொருப்பு ஒழித்து , வேறு
உன்னு குன்று எலாம் உடன் அடுக்கினேம் . ' - 4.3.57
3945 - 'சேமம் அவ் வழிச் செய்து , செங்கதிர்க்
கோமகன் தனைக் கொண்டு வந்து , யாம்
மேவு குன்றின்மேல் வைகும் வேலை வாய் ,
ஆவி உண்டனன் அவனை , அன்னவன் . ' - 4.3.58
3946 - 'ஒளித்தவன் உயிர்க் கள்ளை உண்டு உளம் ,
களித்த வாலியும் , கடிதின் எய்தினான் ;
விளித்து நின்று , வேறு உரை பெறான் ; “இருந்து
அளித்த வாறு நன்று , இளவலார் ! '' எனா . ' - 4.3.59
3947 - 'வால் விசைத்து , வான் வளி நிமிர்ந்து என
கால் விசைத்து , அவன் கடிதின் எற்றலும் ,
நீல் நிறத்து விண் நெடு முகட்டவும் ,
வேலை புக்கவும் , பெரிய வெற்பு எலாம் . ' - 4.3.60
3948 - 'ஏறினான் அவன் ; எவரும் அஞ்சு உற
சீறினான் , நெடுஞ்ச் சிகரம் எய்தினான் ;
வேறு இலாத அன்பு உதவ , மெய்ம்மையால்
ஆறினானும் வந்து அடி வணங்கினான் . ' - 4.3.61
3949 - 'வணங்கி . `'அண்ண ! நின் வரவு இலாமையால் ,
உணங்கி , உன்வழிப் படர உன்னு வேற்கு ,
இணங்கர் இன்மையால் , இறைவ ! நும் உடை
கணங்கள் , 'காவல் , உன் கடன்மை '' என்றனர் . - 4.3.62
3950 - “ஆணை அஞ்சி , இவ் அரசை எய்தி வாழ்
நாண் இலாத என் நவையை , நல்குவாய்
பூண் உலாவு தோள் இறை ! பொறாய் ! '' எனக் ,
கோணினான் , நெடுங் கொடுமை கூறினான் . ' - 4.3.63
3951 - 'அடல் கடந்த தோள் அவனை அஞ்சி , வெங்
குடல் கலங்கி , எம் குலம் ஒடுங்க , முன்
கடல் கடைந்த அக் கரம் தலங்களால் ,
உடல் கடைந்தனன் ; இவன் உலைந்தனன் . ' - 4.3.64
3952 - 'பற்றி , அஞ்சலன் பழியை , வெஞ்சினம்
முற்றி நின்றதன் முரண் வலிக் கையால் ,
எற்றுவான் எடுத்து எழுதலும் , பிழைத்து ,
அற்றம் ஒன்று பெற்று , இவன் , அகன்றனன் . ' - 4.3.65
3953 - எந்தை ! மற்று அவன் எயிறு அதுக்குமேல் ,
அந்தகன் கு உம் ஓர் அரணம் இல்லையால் ;
இந்த வெற்பின் வந்து இவன் இருந்தனன் -
முந்தை உற்றது ஓர் சாபம் உண்மையால் . - 4.3.66
3954 - 'உருமை என்று இவற்கு உரிய தாரம் ஆம்
அரு மருந்தையும் அவன் விரும்பினான் ;
இருமையும் துறந்து , இவன் இருந்தனன் ;
கருமம் இங்கு இது ; எம் கடவுள் ! ' என்றனன் . - 4.3.67
3955 - இராமன் சினம்
பொய் இலாதவன் வரன்முறை இ மொழி புகல ,
ஐயன் , ஆயிரம் பெயர் உடை அமரர்க்கும் அமரன் ,
வையம் நுங்கிய வாய் இதழ் துடித்தது ; மலர் கண்
செய்ய தாமரை , ஆம்பல் அம் போது எனச் சிவந்த . - 4.3.68
3956 - கவிக்கூற்று
ஈரம் நீங்கிய சிற்றவை சொற்றனள் என்ன ,
ஆரம் வீங்கு தோள் தம்பிக்குத் தன் அரசு உரிமை
பாரம் ஈந்தவன் , 'பரிவு இலன் ஒருவன் , தன் இளையோன்
தாரம் வௌவினன் ' என்ற சொல் தரிக்கும் ஆறு உளதோ ? - 4.3.69
3957 - 'உலகம் ஏழினோடு ஏழும் வந்து அவன் உயிர்க்கு உதவி
விலகும் என்னினும் , வில் இடை வாளியின் வீட்டித் ,
தலைமையோடு , நின்தாரமும் , உனக்கு இன்று தருவேன் ;
புலமையோய் ! அவன் உறைவிடம் காட்டு ' என்று புகன்றான் . - 4.3.70
3958 - சுக்கிரீவன் மகிழ்ச்சியும் எண்ணமும்
எழுந்த பேர் உவகைக்
கடற் பெரும் திரை இரைப்ப ,
அழுந்து துன்பினுக்கு அ கரை
கண்டனன் அனையான் ,
'விழுந்ததே இனி வாலிதன்
வலி ! ' என , விரும்பா ,
மொழிந்த வீரற்கு , 'யாம் எண்ணுவது
உண்டு ' என மொழிந்தான் . - 4.3.71
3959 - சுக்கிரீவன் அமைச்சரோடு தனியே ஆலோசித்தல்
அனைய ஆண்டு உரைத்து , அனுமனே முதலிய அமைச்சர் ,
நினைவும் , கல்வியும் , நீதியும் , சூழ்ச்சியும் நிறைந்தார்
எனையர் , அன்னவரோடும் வேறு இருந்தனன் , இரவி
தனையன் ; அவ் வழிச் சமீரணன் மகன் உரை தருவான் . - 4.3.72
3960 - அனுமன் இராம இலக்குவரின் ஆற்றலை விளக்குதல்
'உன்னினேன் , நினது உள்ளத்தின் உள்ளதை , உரவோய் !
`'அன்ன வாலியைக் காலனுக்கு அளிப்பது ஓர் ஆற்றல்
இன்ன வீரர்பால் இல்லை '' என்று அயிர்த்தனை ; இனி , யான்
சொன்ன கேட்டு , அவை கடைப்பிடிப்பாய் ' எனச் சொன்னான் . - 4.3.73
3961 - இராமன் திருமாலே என அனுமன் நிறுவுதல் (3961-3964)
'சங்கு சக்கரக் குறி உள தடக்கையில் , தாளில் ;
எங்கும் இத்தனை இலக்கணம் யாவர்க்கும் இல்லை ;
செம் கண் வில் கரம் அத்து இராமன் அத் திரு நெடும் மாலே ;
இங்கு உதித்தனன் , ஈண்டு அறம் நிறுத்துதற்கு ; இன்னும் ' - 4.3.74
3962 - 'செறுக்கும் வன் திறல் திரிபுரம் தீ எழச் சினவிக் ,
கறுக்கும் வெஞ்சினக் காலன்தன் காலமும் காலால்
அறுக்கும் புங்கவன் ஆண்டபேர் ஆடகத் தனிவில்
இறுக்கும் தன்மை , அ மாயவற்கு அன்றியும் எளிதோ ? ' - 4.3.75
3963 - 'என்னை ஈன்றவன் , `'இ வுலகு
யாவையும் ஈன்றான்
தன்னை ஈன்றவற்கு அடிமை செய் ;
தவம் உனக்கு அதுவே ;
உன்னை ஈன்ற எற்கு உறு பதம்
உளது '' என உரைத்தான் ;
இன்ன தோன்றலே அவன் ;
இதற்கு ஏது உண்டு ; - இறையோய் ! - 4.3.76
3964 - 'துன்பு தோன்றிய பொழுது ,
உடன் தோன்றுவன் ; ”எவர்க்கும்
முன்பு தோன்றலை அறிதற்கு
முடிவு என் ? '' என்று இயம்ப ,
“அன்பு சான்று '' என உரைத்தனன் ;
ஐய ! என் யாக்கை ,
என்பு தோன்றல உருகினது
எனின் , பிறிது எவனோ ? ' - 4.3.77
3965 - இராமனாற்றலைச் சோதிக்க அனுமன் கூறும் உபாயம்
'பிறிதும் , அன்னவன் பெருவலி ஆற்றலைப் , பெரியோய் !
அறிதி என்னின் , உண்டு உபாயமும் ; அ•து அரும் மரங்கள்
நெறியில் நின்றன ஏழில் , ஒன்று உருவ , இ நெடியோன்
பொறிகொள் வெஞ்சரம் போவதுகாண் ! ' எனப் புகன்றான் . - 4.3.78
3966 - சுக்கிரீவன் உடன்பட்டு இராமனை அணுகிக் கூறல்
'நன்று நன்று எனா , நல் நெடுங்
குன்றமும் நாணும்
தன் துணைத் தனி மாருதி
தோளிணை தழுவி ,
சென்று , செம்மலைக் குறுகி , 'யான்
செப்புவது உளதால் ,
ஒன்று உனக்கு ' என , இராமனும் ,
'உரைத்தி அஃது ' என்றான் . - 4.3.79
4.4 . மராமரப் படலம் (3967-3987)
3967 - மராமரங்கள் ஏழினுள் ஒன்றை எய்யும்படி சுக்கிரீவன் இராமனை வேண்டுதல்
'ஏக வேண்டும் இ நெறி ' என , இனிது கொண்டு ஏகி ,
'மாகம் நீண்டன குறுகிட நிமிர்ந்தன மரங்கள்
ஆக ஐந்தினோடு இரண்டின் ஒன்று உருவ , நின் அம்பு
போகவே , என்தன் மனத்து இடர் போம் ' எனப் புகன்றான் . - 4.4.1
3968 - இராமன் இசைதல்
மறு இலான் அது கூறலும் , வானவர்க்கு இறைவன் ,
முறுவல் செய்து , அவன் முன்னிய முயற்சியை முன்னி ,
எறுழ் வலித் தடந் தோள்களால் சிலையை நாண் ஏற்றி ,
அறிவினால் அளப்ப அரியவற்று அருகு சென்று அணைந்தான் . - 4.4.2
3969 - மராமரங்களின் வருணனை (3969-3977)
ஊழி பேரினும் பேர்வில ; உலகங்கள் உலைந்து
தாழும் காலத்தும் தாழ்வில ; தயங்கு பேர் இருள் சூழ்
ஆழி மாநிலம் தாங்கிய அருங் குலக் கிரிகள்
ஏழும் , ஆண்டு சென்று ஒரு வழி நின்று என இயைந்த . - 4.4.3
3970 - கலை கண்டு ஓங்கிய மதியமும் , கதிரவன் தானும் ,
தலை கண்டு ஓடுதற்கு அருந்தவம் தொடங்குறும் ; சாரல்
மலை கண்டோம் என்பது அல்லது , மலர்மிசை அயற்கும் ,
இலை கண்டோம் எனத் தெரிப்ப அருந் தரத்தன , ஏழும் . - 4.4.4
3971 - ஒக்க நாள் எலாம் உழல்வன , உலைவு இல ஆக ,
மிக்கது ஓர் பொருள் உளது என வேறு கண்டிலம் ஆல் ,
திக்கும் , வானமும் செறிந்த அத் தரு நிழல் சீதம்
புக்கு நீங்கலின் தளர்வு இல , இரவி தேர்ப் புரவி . - 4.4.5
3972 - நீடு நாள்களும் , கோள்களும் , என்ன , மேல் நிமிர்ந்து
மாடு தோற்றுவ மலர் எனப் பொலிகின்ற வளத்த ;
ஓடு மா சுடர் வெண் மதிக்கு , உள் கறுப்பு , உயர்ந்த
கோடு தேய்த்தலின் , களங்கம் உற்றால் எனும் குறிய . - 4.4.6
3973 - தீது அறும் பெருஞ் சாகைகள் தழைக்கின்ற செயலால்
வேதம் என்னவும் தகுவன ; விசும்பினும் உயர்ந்த ;
ஆதி அண்டம் முன்பு அளித்தவன் உலகின் , அங்கு அவன் ஊர்
ஓதிமம் தனிப் பெடையொடும் புடை இருந்து உறைவ . - 4.4.7
3974 - நாற்றம் மல்கு போது , அடை , கனி , காய் முதல் நானா
வீற்று , மண் தலத்து , யாவையும் , வீழ்கில , யாண்டும் ,
காற்று அலம்பினும் , கலி நெடு வான் இடை கலந்த
ஆற்றின் வீழ்ந்து போய் , அலை கடல் பாய் தரும் இயல்ப . - 4.4.8
3975 - அடியினால் உலகு அளந்தவன் அண்டத்துக்கு அப்பால்
முடிவின் மேல் சென்ற முடியன ஆதலின் , முடியா
நெடிய மால் எனும் நிலையன ; நீரிடைக் கிடந்த
படியின் மேல் நின்ற மேரு மால் வரையினும் பழைய . - 4.4.9
3976 - வள்ளல் இந்திரன் மைந்தற்கும் தம்பிக்கும் வயிர்த்த
உள்ளமே என , ஒன்றின் ஒன்று உள் வயிர்ப்பு உடைய ;
தெள்ளு நீரிடைக் கிடந்து பார் சுமக்கின்ற சேடன்
வெள்ளி வெண் படம் குடைந்து கீழ் போகிய வேர . - 4.4.10
3977 - சென்று திக்கினை அளந்தன ; `'பணைகளின் '' , தேவர் ,
`'என்று நிற்கும் '' என்று இசைப்பன ; இரு சுடர் திரியும்
குன்றினுக்கு உயர்ந்து அகன்றன ; ஒன்றினுங் குறுகா ;
ஒன்றினுக்கு ஒன்றின் இடை , நெடிது யோசனை உடைய . - 4.4.11
3978 - இராமன் நாணொலி எழுப்புதல்
ஆய மாமரம் அனைத்தையும் நோக்கி நின்று , அமலன் ,
தூய வார் கணை துரப்பது ஓர் ஆதரம் தோன்றச்
சேய வானமும் , திசைகளும் செவிடு உறத் தேவர்க்கு
ஏய்வு இலாதது ஓர் பயம் வரச் சிலையின் நாண் எறிந்தான் . - 4.4.12
3979 - நாணொலியின் வருணனை
ஒக்க நின்றது எவ் உலகமும் அங்கு அங்கே ஓசை ;
பக்கம் நின்றவர்க்கு உற்றது பகர்வது எப்படியோ ?
திக்கயங்களும் மயங்கின ; திசைகளும் திகைத்த ;
புக்கு , அயன்பதி சலிப்பு உற ஒலித்தது , அப் பொரு வில் . - 4.4.13
3980 - அரிந்தமன் சிலை நாண் நெடிது ஆர்த்தலும் , அமரர்
இரிந்து நீங்கினர் , கற்பத்தின் இறுதி என்று அயிர்த்தார் ;
பரிந்த தம்பியே பாங்கு நின்றான் ; மற்றைப் பல்லோர்
புரிந்த தன்மையை உரை செயின் , பழி அவர்ப் புணரும் . - 4.4.14
3981 - இராமன் மராமரங்களை எய்தல்
” எய்தல் காண்டும் கொல் இன்னம் '' என்று ,
அரிதின் வந்து எய்தி ,
பொய் இல் மாருதி முதலினோர்
புகழ்வுறும் பொழுதில் ,
மொய் கொள் வார்சிலை நாணினை
முறை உற வாங்கி ,
வெய்ய வாளியை , ஆளுடை
வில்லியும் விட்டான் . - 4.4.15
3982 - இராமனது அம்பின் செயல்
ஏழு மா மரம் உருவிக் கீழ் உலகம் என்று இசைக்கும்
ஏழும் ஊடு புக்கு உருவிப் பின் உடன் அடுத்து இயன்ற
ஏழ் இலாமையால் மீண்டது , அவ் இராகவன் பகழி ;
ஏழு கண்டபின் உருவுமால் , ஒழிவது அன்று , இன்னும் . - 4.4.16
3983 - ஏழு என நின்றவை அஞ்சுதல்
ஏழு வேலையும் , உலகம் மேல் உயர்ந்தன ஏழும் ,
ஏழு குன்றமும் , இருடிகள் எழுவரும் , புரவி
ஏழும் , மங்கையர் எழுவரும் , நடுங்கின என்ப ,
” ஏழு பெற்றதோ இக் கணைக்கு இலக்கம் ? '' என்று எண்ணி . - 4.4.17
3984 - சுக்கிரீவன் பேசத் தொடங்குதல்
அன்னது ஆயினும் , அறம் அத்து இன் உ கு
ஆர் உயிர் துணைவன்
என்னும் தன்மையை நோக்கினர்
யாவரும் , எவையும் ;
பொன்னின் வார் கழல்
புது நறும் தாமரை பூண்டு ,
சென்னி மேல் கொளூஉ , அருக்கன் சேய்
இவை இவை செப்பும் . - 4.4.18
3985 - சுக்கிரீவன் இராமனைத் துதித்தல்
” வையம் நீ ! வானும் நீ ! மற்றும் நீ ! மலரின் மேல்
ஐயன் நீ ! ஆழிமேல் ஆழிமா மாலும் நீ !
செய்யன் நீ ! வினை தெறும் தேவும் நீ ! நாயினேன்
உய்ய வந்து உதவினாய் , உலகம் முந்து உதவினாய் ! '' - 4.4.19
3986 - சுக்கிரீவன் முகமன் கூறுதல்
`'என் எனக்கு அரியது , எ பொருளும் என்கு எளிதலால் ?
உன்னை இ தலை விடுத்து உதவினார் விதியினார் ;
அன்னை ஒப்புடைய உன் அடியருக்கு அடியன் யான் ,
மன்னவர்க்கு அரச ! '' என்று உரை செய்தான் வசை இலான் . - 4.4.20
3987 - மற்றை வானரரின் மகிழ்ச்சி
ஆடினார் , பாடினார் , அங்கும் இங்கும் கலந்து
ஓடினார் , உவகை இன் நறவை உண்டு உணர்கிலார் ,
” நேடினாம் வாலி காலனை '' எனா , நெடிது நாள்
வாடினார் தோள் எலாம் வளர , மற்றவர் எலாம் . - 4.4.21
4.5 . துந்துபிப் படலம் (3988 -4003)
3988 - இராமன் துந்துபியின் உடலைக் காணுதல்
அண்டமும் அகிலமும் அடைய அன்று அனல் இடை
பண்டு வெந்தன நெடும் பசை வறந்திடினும் , வான்
மண்டலம் தொடுவது , அம் மலையின் மேல் மலை எனக்
கண்டனன் , துந்துபிக் கடல் அனான் உடல் , அரோ . - 4.5.1
3989 - இராமன் வினாவுதல் 'தென்புலக் கிழவன் ஊர் மயிடமோ ? திசையின் வாழ்
வன்பு உலக் கரி மடிந்தது கொலோ ? மகர மீன்
என்பு உலப்பு உற உலர்ந்தது கொலோ இது ? ' எனா ,
'அன்பு உலப்பு அரிய நீ உரை செய்வாய் ' என , அவன் . - 4.5.2
3990 - சுக்கிரீவன் துந்துபியின் வரலாற்றைக் கூறுதல் (3990-4002)
'துந்துபிப் பெயருடைச் சுடு சினத்து அவுணன் , மீது
இந்துவைத் தொட நிமிர்ந்து எழு மருப்பு இணையினான் ,
மந்தரக் கிரி எனப் பெரியவன் , மகர நீர்
சிந்திடக் கரு நிறத்து அரியினைத் தேடுவான் . ' - 4.5.3
3991 - 'அங்கு வந்து அரி எதிர்ந்து , ” அமைதி ; என் ? '' என்றலும் ,
`'பொங்கு வெஞ் செருவினில் பொருதி '' என்று உரை செயக்
`'கங்கையின் கணவன் , அக் கறை மிடறு இறைவனே
உங்கள் வெங் கதம் வலிக்கு ஒருவன் '' என்று உரை செய்தான் . ' - 4.5.4
3992 - 'கடிது சென்று , அவனும் , அக்
கடவுள் தன் கயிலையைக்
கொடிய கொம்பினின் மடுத்து
எழுதலும் , குறுகி முன் ,
” நொடிதி , நின் குறை என் ? ''
என்றலும் , நுவன்றனன் அரோ ,
” முடிவு இல் வெஞ் செரு எனக்கு
அருள் செய்வான் முயல்க '' எனா . ' - 4.5.5
3993 - ’ “மூலமே வீரமே மூடினாயோடு போர்
ஏலுமே ? தேவர் பால் ஏகு '' எனா ஏவினான் ;
” சால நாள் போர் செய்வாய் ஆதியேல் , சாரல் ; போர்
வாலி பால் ஏகு '' எனா , வான் உளோர் வான் உளான் . ' - 4.5.6
3994 - 'அன்னவன் விட , உவந்து , அவனும் வந்து , ” அரிகள் தம்
மன்னவன் ! வருக ! போர் செய்க ! '' எனா , மலையினைச்
சின்ன பின்னம் படுத்திடுதலும் , சினவி , என்
முன்னவன் , முன்னர் வந்து அனையவன் முனைதலும் . ' - 4.5.7
3995 - 'இருவரும் திரிவுறும் பொழுதின் இன்னவர்கள் என்று
ஒருவரும் சிறிது உணர்ந்திலர்கள் ; எவ் உலகமும்
வெருவரும் தகையர் ஆய்விழுவர் , நின்று எழுவரால் ;
மருவ அருந் தகையர் , தானவர்கள் வானவர்கள் தாம் . ' - 4.5.8
3996 - 'தீ எழுந்தது விசும்பு உற ; நெடுந் திசை எலாம்
போய் எழுந்தது முழக்கு ; உடன் எழுந்தது புகை ;
தோய நன் புணரியும் , தொடர் தடங் கிரிகளும் ,
சாய் அழிந்தன , அடி தலம் எடுத் திடுதலால் . ' - 4.5.9
3997 - 'புயலும் வானகமும் அப் புணரியும் புணரி சூழ்
அயலும் வீழ் தூளியால் அறிவருந் தகையவா ,
மயனின் மாமகனும் வாலியும் மறம் அத்து உடலினார் ,
இயலும் மாமதியம் ஈர் ஆறும் வந்து எய்தவே . ' - 4.5.10
3998 - 'அற்றது ஆகிய செருப் புரிவுறும் அளவினில் ,
கொற்ற வாலியும் அவன் குவவு தோள் வலியொடும்
பற்றி , ஆசையின் நெடும் பணை மருப்பு இணை பறித்து
எற்றினான் ; அவனும் வான் இடியின் நின்று உரறினான் . ' - 4.5.11
3999 - 'தலையின் மேல் அடிபடக் கடிது சாய் நெடிதுதாள்
உலைய , வாய் முழை திறந்து உதிர ஆறு - ஒழுக , மா
மலையின் மேல் உரும் இடித்து என்ன , வான் மண்ணொடும்
குலைய , மாதிசைகளும் செவிடு உற குத்தினான் . ' - 4.5.12
4000 - ’ ”கவரி இங்கு இது '' எனக் கரம் தலம் கொடு திரித்து
இவர்தலும் , குருதிபட்டு இசை தொறும் , திசை தொறும்
துவர் அணிந்தன எனப் பொசி துதைந்தன , துணைப்
பவர் நெடும் பணை மதம் பயிலும் வன் கரிகளே . ' - 4.5.13
4001 - 'புயல் கடந்து , இரவி தன் புகல் கடந்து , அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து எனையவும் தவிர , மேல்
வயிர வன் கரம் தலம் அத்து அவன் வலித்து எறிய , அன்று ,
உயிரும் விண் படர , இவ் உடலும் இப் பரிசு அரோ . ' - 4.5.14
4002 - 'முட்டி , வான் முகடு சென்று அளவி , இம் முடை உடற்
கட்டி மால் வரையை வந்து உறுதலும் , கருணையான்
இட்ட சாபமும் எனக்கு உதவும் ' என்று இயல்பினின்
பட்டவா முழுவதும் பரிவினால் உரை செய்தான் . - 4.5.15
4003 - இராமன் பணித்த வண்ணம் துந்துபியின் உடலை இலக்குவன் எற்றுதல்
கேட்டனன் அமலனும் கிளந்தவாறு எலாம் ,
வாள் தொழில் இளவலை , 'இதனை மைந்த ! நீ
ஓட்டு ' என , அவன் கழல் விரலின் உந்தினான் ;
மீட்டு அது விரிஞ்சன் நாடு உற்று மீண்டதே . - 4.5.16
4.6 . கலன்காண் படலம் (4004-4037 )
4004 - இராமனிடம் சுக்கிரீவன் சீதை அணிகலன்களை முடிந்திட்டமை கூறுதல் (4004-4007)
ஆ இடை , அரி குலம் அசனி அஞ்சுற
வாய் திறந்து ஆர்த்தது ; வள்ளல் , ஓங்கிய
தூய நல் சோலையில் இருந்த சூழல்வாய் ,
'நாயக ! உணர்த்துவது உண்டு நான் ' எனா . - 4.6.1
4005 - இவ் வழி யாம் இயைந்து இருந்தது ஓர் இடை ,
வெவ் வழி இராவணன் கொணர , மேலைநாள்
செம் வழி நோக்கி , நின் தேவியே கொல் ஆம்
கவ்வையின் அரற்றினள் கழிந்த சேண் உளாள் . - 4.6.2
4006 - உழையரின் உணர்த்துவது உளது என்று உன்னியோ ?
குழை பொரு கண்ணினாள் குறித்தது ஓர்ந்திலம் ;
மழை பொரு கண் இணை வாரியோடு தன்
இழை பொதிந்து இட்டனள் ; யாங்கள் ஏற்றனம் . - 4.6.3
4007 - சுக்கிரீவன் சீதையின் அணிகளைக் கொணர்ந்து இராமனுக்குக் காட்டுதல்
” வைத்தனம் ! இவ் வழி ; 'வள்ளல் ! நின்வயின்
உய்த்தனம் தந்த போது உணர்தி ' ஆல் எனாக்
கைத்தலம் அத்து அன்னவை கொணர்ந்து காட்டினான் ;
நெய்த்தலை பால் கலந்து அனைய நேயத்தான் . '' - 4.6.4
4008 - சீதையின் அணிகலம் நோக்கிய இராமன் நிலை (4008-4012)
தெரிவுற நோக்கினன் தெரிவை மெய் அணி ;
எரி கனல் எய்திய மெழுகின் யாக்கைபோல்
உருகினன் என்கிலம் ; உயிருக்கு ஊற்றம் ஆய்ப்
பருகினன் என்கிலம் பகர்வது என்கொல் ஆம் ? - 4.6.5
4009 - நல்குவது என் ? இனி ; நங்கை கொங்கையைப்
புல்கிய பூணும் , அக் கொங்கை போன்றன ;
அல்குலின் அணிகளும் , அல்குல் ஆயின ;
பல கலன் பிறவும் , அப்படிவம் ஆனவே . - 4.6.6
4010 - விட்ட பேர் - உணர்வினை விளித்த என்கெனோ ?
அட்டன உயிரை அவ் அணிகள் , என்கெனோ !
கொட்டின சாந்து எனக் குளிர்ந்த என்கெனோ !
சுட்டன என்கெனோ ! யாது சொல்லுகேன் ? - 4.6.7
4011 - மோந்திட நறுமலர் ஆன ; மொய்ம்பினில்
ஏந்திட உத்தரியத்தை ஏய்ந்தன ;
சாந்தமும் ஆய் ஒளி தழுவப் போர்த்தலால்
பூ துகில் ஆய ; அப் பூவை பூண்களே . - 4.6.8
4012 - ஈர்த்தன செங்கண் நீர் வெள்ளம் யாவையும் ;
போர்த்தன மயிர் புறம் புளகம் ; பொங்குதோள்
வேர்த்தனன் என்கெனோ ? வெதும்பினான் என்கோ ?
தீர்த்தனை அவ் வழி யாது செப்புகேன் ? - 4.6.9
4013 - சோர்ந்து சாய்ந்த இராமனைச் சுக்கிரீவன் தாங்குதல்
விடம் பரந்து அனையது ஓர் வெம்மை மீ கொள ,
நெடும்பொழுது உணர்வினோடு உயிர்ப்பும் நீங்கிய
தடம்பெருங் கண்ணனைத் தாங்கினான் ; தனது
உடம்பினில் செறி மயிர் சுறுக்கொண்டு ஏறவே . - 4.6.10
4014 - இராமனைச் சுக்கிரீவன் தேற்றுதல் (4014-4021)
தாங்கினன் , இருத்தி , அ துயரம் தாங்கலாது
ஏங்கிய நெஞ்சினன் , இரங்கி விம்முவான் ,
'வீங்கிய தோளினாய் ! வினையினேன் , உயிர்
வாங்கினென் இவ் அணி வருவித்தே ' எனா . - 4.6.11
4015 - 'அயன் உடை அண்டத்தின் அ புறத்தையும்
மயர்வு அற நாடி , என் வலியும் காட்டி , உன்
உயர் புகழ்த் தேவியை உதவற் பாலன் ; ஆல்
துயர் உழந்து அயர்தியோ ? சுருதி நூல் வலாய் ' . - 4.6.12
4016 - திருமகள் அனைய அத் தெய்வக் கற்பினாள்
வெருவரச் செய்து உள வெய்யவன் புயம்
இருபதும் ஈரைந்து தலையும் நிற்க ; உன்
ஒரு கணைக்கு ஆற்றுமோ ? உலகம் ஏழுமே . - 4.6.13
4017 - 'ஈண்டு நீ இருந்து அருள் ; ஏழொடு ஏழ் எனப்
பூண்ட பேர் உலகங்கள் வலியில் புக்கு , ' இடைத்
தேண்டி , அவ் அரக்கனைத் திருகித் தேவியைக்
காண்டி , யான் இவ் வழிக் கொணர்வல் காவலோய் . - 4.6.14
4018 - ஏவல் செய் துணைவரேம் யாங்கள் ; ஈங்கு இவன்
தா அரும் பெரு வலித் தம்பி ; நம்பி ! நின்
சேவகம் இது எனில் , சிறுக நோக்கல் என் ?
மூவகை உலகும் நின் மொழியின் முந்தும் ஓ . - 4.6.15
4019 - பெருமையோர் ஆயினார் , பெருமை பேசலார் ;
கருமமே அல்லது பிறிது என் கண்டது ?
தருமம் நீ அல்லது தனித்து வேறு உண்டோ ?
அருமை ஏது உனக்கு ? நின்று அவலம் கூர்தி ஓ ? - 4.6.16
4020 - முளரி மேல் வைகுவான் , முருகன் - தந்த அத்
தளிர் இயல் பாகத்தான் , தடக்கை ஆழியான் ,
அளவி ஒன்று ஆவர் ஏ அன்றி , ஐயம் இல்
கிளவியாய் ! தனித்தனி கிடைப்பரோ ? துணை . - 4.6.17
4021 - ” என் உடைச் சிறு குறை முடித்தல் , ஈண்டு ஒரீஇப்
பின் உடைத்தாயினும் ஆக ; பேதுறும்
மின் இடைச் சனகியை மீட்டு மீள்தும் ஆல்
பொன் உடைச் சிலையினாய் ! விரைந்துபோய் , `' என்றான் . - 4.6.18
4022 - சுக்கிரீவனிடம் இராமன் கூறுதல் (4022-4028)
எரி கதிர் காதலன் இனைய கூறலும் ,
அருவி அம் கண் திறந்து , அன்பின் நோக்கினான் ,
திரு உறை மார்பனும் , தெளிவு தோன்றிட ,
ஒரு வகை உணர்வு வந்து , உரைப்பது ஆயினான் . - 4.6.19
4023 - விலங்கு எழில் தோளினாய் ! வினையினேனும் , இவ்
இலங்கு வில் கரத்தினன் இருக்கவே , அவள்
கலன் கழித்தனள் ; இது கற்பு மேவிய
பொலன் குழைத் தெரிவையர் புரிந்துளோர்கள் யார் ? - 4.6.20
4024 - வாள் நெடுங்கண்ணி என் வரவு நோக்க , யான்
தாள் நெடும் கிரியொடும் தடங்கள் தம்மொடும்
பூணொடும் புலம்பினன் , பொழுது போக்கினேன் ;
நாண் நெடும் சிலை சுமந்து உழல நாணலேன் . - 4.6.21
4025 - ஆறு உடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி , வெம் சமம் அத்து
ஊறு உறத் தம் உயிர் உகுப்பர் ; என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் . - 4.6.22
4026 - கரும் கடல் தொட்டனர் ; கங்கை தந்தனர் ;
பொரும் புலி மானொடு புனலும் ஊட்டினர் ;
பெரும் தகை என் குலத்து அரசர் , பின் ஒரு ,
திருந்து இழை துயரம் நான் தீர்க்ககிற்றிலேன் . - 4.6.23
4027 - இந்திரற்கு உரியது ஓர் இடுக்கண் தீர்த்து , இகல்
அந்தகற்கு அரிய போர் அவுணன் தேய்த்தனன் ;
எந்தை , மற்று அவனின் வந்து உதித்த யான் உளேன்
வெம் துயர்க் கொடும் பழி வில்லின் , தாங்கினேன் . - 4.6.24
4028 - 'விரும்பு எழில் எந்தையார் மெய்ம்மை வீயுமேல்
வரும் பழி என்று யான் மகுடம் சூடலேன் ;
கரும்பு அழி சொல்லியைப் பகைஞன் கை கொள
பெரும் பழி சூடினேன் ; பிழைத்தது என் ? அரோ . - 4.6.25
4029 - சுக்கிரீவன் மீட்டும் ஆறுதல் கூறி இராமன் துயர்நீக்கல்
என்ன நொந்து , இன்னன பன்னி , ஏங்கியே
துன்ன அரும் துயரம் அத்து சோர்கின்றான் தனைப்
பன்ன அரும் கதிரவன் புதல்வன் , பையுள் பார்த்து ,
அன்ன வெம் துயர் எனும் அளக்கர் நீக்கினான் . - 4.6.26
4030 - இராமன் சுக்கிரீவனிடம் மீட்டும் கூறுதல்
'ஐய ! நீ ஆற்றலின் , ஆறினேன் , அலது
உய்வனே ? எனக்கு இதின் உறுதிவேறு உண்டோ ?
வையகம் அத்து இப்பழி தீர , மாய்வது
செய்வன் ; நின் குறை முடித்து அன்றி செய்கலேன் . - 4.6.27
4031 - அனுமன் இராமனிடம் கூறுதல் (4031-4036)
என்றனன் இராகவன் ; இனைய காலையில்
வன் திறல் மாருதி , வணங்கினான் ; 'நெடுங்
குன்று இவர் தோளினாய் ! கூறவேண்டுவது
ஒன்று உளது ; அதனை நீ உணர்ந்து கேள் ' எனா . - 4.6.28
4032 - 'கொடும் தொழில் வாலியைக் கொன்று , கோமகன்
கடும் கதிரோன் மகன் ஆக்கிக் கைவளர்
நெடும் படை கூட்டினாலன்றி , நேடரிது
அடும் படை அரக்கர்தம் இருக்கை , ஆணையாய் ! - 4.6.29
4033 - 'வானதோ ? மண்ணதோ ? மற்று வெற்பதோ ?
ஏனை மா நாகர்தம் இருக்கைப் பாலதோ ?
தேன் உலாம் தெரியலாய் ! தெளிவது அன்று , நாம்
ஊன் உடை மானிடம் ஆனது உண்மையால் . ' - 4.6.30
4034 - எவ் உலகங்களும் இமைப்பின் எய்துவர் ;
வவ்வுவர் அவ் வழி மகிழ்ந்த யாவையும் ;
வெம் வினை வந்தென வருவர் மீள்வர் ; ஆல்
அவ் அவர் உறைவிடம் அறியற் பாலதோ ? - 4.6.31
4035 - ஒரு முறையே பரந்து , உலகம் யாவையும்
திரு உறை வேறு இடம் தேரவேண்டும் ; ஆல்
வரன் முறை நாடிட வரம்பு இன்று ; ஆல் உலகு
அருமை உண்டு ; அளப்ப அரும் ஆண்டும் வேண்டும் ஆல் . - 4.6.32
4036 - ஏழுபத்து ஆகிய வெள்ளத்து எம் படை ,
ஊழியிற் கடல் என உலகம் போர்க்கும் ; ஆல்
ஆழியைக் குடிப்பினும் , அயன் செய் அண்டத்தைக்
கீழ் மடுத்து எடுப்பினும் கிடைத்த செய்யும் ஆல் . - 4.6.33
4037 - இராமன் முதலியோர் வாலிபாற் போதல்
`''ஆதலால் அன்னதே அமைவது ஆம் என ,
நீதியாய் ! நினைந்தனென் '' என நிகழ்த்தினான் ;
'சாது ஆம் ' என்ற அத் தனுவின் செல்வனும்
'போதும் நாம் வாலிபால் ' என்னப் போயினார் . - 4.6.34
4.7 . வாலி வதைப் படலம் (4038- )
4038 - இராமன் முதலியோர் மலைச்சாரல் வழியே செல்லுதல்
வெம் கண் ஆளி ஏறும் , மீளிமாவும் , வேக நாகமும் ,
சிங்க ஏறு இரண்டொடும் திரண்ட அன்ன செய்கையார் ,
தங்கு சாலம் , மூலம் ஆர் தமாலம் , ஏலம் , மாலைபோல்
பொங்கு நாகமும் துவன்று சாரல் ஊடு போயினார் . - 4.7.1
4039 - அவர்கள் சென்ற மலை வழியிலுள்ள காட்சிகள் (4039-4045)
உழை உலாம் நெடுங்கண் மாதர் ஊசல் ; ஊசல் அல்லவேல் ,
தழை உலாவு சந்து அலர்ந்த சாரல் ; சாரல் அல்லவேல் ,
மழை உலாவு முன்றில் ; அல்ல , மன்றல் நாறு சண்பகக்
குழை உலாவு சோலை ; சோலை அல்ல , பொன்செய் குன்றமே . - 4.7.2
4040 - அறங்கள் நாறும் மேனியார் , அரி கணங்கள் ஓடு உம் அங்கு
இறங்கு போதும் , ஏறுபோதும் . ஈறு இலாத ஓதையால் ,
கறங்கு வார் கழல் கலன் கலிப்ப , முந்து கண் முகிழ்த்து
உறங்கு மேகம் நன்கு உணர்ந்து மாகம் மீது உலாவுமே . - 4.7.3
4041 - நீடு நாகம் ஊடு மேகம் ஓட , நீரும் ஓட , நேர்
ஆடும் நாகம் ஓட , மான யானை ஓட , ஆளி போம்
மாடு நாகம் நீடு சாரல் , வாளை ஓடும் வாவி ஊடு
ஓடு நாகம் ஓட , வேங்கை ஓடும் ; யூகம் ஓடுமே . - 4.7.4
4042 - மருண்ட மா மலை தடங்கள் செல்லல் ஆவ அல்ல ; மால்
தெருண்டு இலா மதத்த யானை சீறி நின்று சிந்தலால் ,
இருண்ட காழ் அகில் தடம் அத்து ஒடு இற்று வீழ்ந்த சந்து வந்து
உருண்டபோது , அழிந்த தேன் ஒழுக்கு பேர் இழுக்கினே . - 4.7.5
4043 - மினல் மணி குலம் துவன்றி , வில் அலர்ந்து , விண்குலாய் ,
அனல் பரப்பல் ஒப்ப மீது இமைப்ப , வந்து அவிப்பபோல் ,
புனல் பரப்பல் ஒப்ப இருந்த பொன்பரப்பும் என்பவால் ;
இனைய வில் தடக்கை வீரர் ஏகுகின்ற குன்றமே . - 4.7.6
4044 - மருவி ஆடும் வாவி தோறும் வானயாறு பாயும் , வந்து ;
இருவி ஆர் தடங்கள்தோறும் ஏறுபாயும் ; ஆறுபோல்
அருவி பாயும் முன்றில் ஒன்றி யானைபாயும் ; ஏனலில்
குருவி பாயும் ; ஓடி , மந்தி கோடு பாயும் , மாடு எலாம் . - 4.7.7
4045 - தேன் இழுக்கு சாரல் வாரி செல்ல , மீது செல்லும் நாள்
மீன் இழுக்கும் ; அன்றி , வானம் வில் இழுக்கும் ; வெண் மதி
கூன் இழுக்கும் ; மற்று உலாவு கோள் இழுக்கும் என்பவால்
வான் இழுக்கும் ஏலம் வாசம் மன்றல் நாறு குன்றமே . - 4.7.8
4046 - இராமன் முதலியோர் கிட்கிந்தை மலையை அடைதல்
அன்னது ஆய குன்றின் ஆறு
சென்ற வீரர் , ஐந்தொடு ஐந்து
உன்னல் ஆய யோசனைக்கும்
உம்பர் ஏறி , இம்பரில்
பொன்னின் நாடு இழிந்தது அன்ன
வாலிவாழ் பொருப்பு இடம்
துன்னினார்கள் ; 'செய்வது என்னை ? '
என்று நின்று சொல்லுவார் . - 4.7.9
4047 - வாலியைக் கொல்லும் உபாயத்தை ஆராய்தல்
அ இடம் அத்து , இராமன் , 'நீ அழைத்து , வாலி ஆனது ஓர்
வெவ் விடத்தின் வந்து போர்விளைக்கும் ஏல்வை , வேறு நின்று
எவ் விடத் துணிந்து அமைந்தது , என்கருத்து இது ' என்றனன் ;
தெவ் அடக்கும் வென்றியானும் , 'நன்று இது ' என்று சிந்தியா . - 4.7.10
4048 - இராமனது கருத்துக்குச் சுக்கிரீவன் இசைதல்
வார்த்தை அன்னது ஆக , வான் இயங்கு தேரினான் மகன் ,
நீர்த் தரங்க வேலை அஞ்ச , நீலமேகம் நாணவே ,
வேர்த்து மண்ணுளோர் இரிந்து , விண் உளோர்கள் விம்ம , மேல்
ஆர்த்த ஓசை , ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே . - 4.7.11
4049 - சுக்கிரீவனது போர் முழக்கம் உறங்கும் வாலியின் செவியிற் சென்று சார்தல்
இடித்து , உரப்பி , 'வந்து போர்
எதிர்த்தியேல் அடர்ப்பன் ' என்று
அடித் தலங்கள் கொட்டி ,
வாய் மடித்து , அடுத்து , அலங்கு தோள்
புடைத்து நின்று , உளைத்த பூசல்
புக்கது என்ப ; மிக்கு இடம்
துடிப்ப அங்கு உறங்கு வாலி
திண் செவி தொளைக்கணே . - 4.7.12
4050 - அப்பேரொலியினைக் கேட்ட வாலி , உலகமெலாம் நடுங்கும்படி அடங்காச் சினமுடையவனாய்ச் சுக்கிரீவனொடு போர் செய்தற்கு விரைந்து எழுதல் (4050-4058)
மால் பெருங் கடம் கரி முழக்கம் , வாள் அரி
ஓர்ப்பது செவி தலம் அத்து என்ன , ஓங்கிய
ஆர்ப்பு ஒலி கேட்டனன் ; அமளிமேல் ஒரு
பாற்கடல் கிடந்ததே அனைய பான்மையான் . - 4.7.13
4051 - உருத்தனன் பொர எதிர்ந்து இளவல் உற்றமை ,
வரைத் தடந் தோளினான் , மனத்தின் எண்ணினான் ;
சிரித்தனன் ; அவ் ஒலி , திசையின் அ புறத்து
இரித்தது , அவ் உலகம் ஒர் ஏழொடு ஏழையே . - 4.7.14
4052 - எழுந்தனன் , வல்விரைந்து , இறுதி ஊழியில்
கொழுந் திரைக் கடல் கிளர்ந்து அனைய கொள்கையான் ;
அழுந்தியது அ கிரி ; அருகில் மால் வரை
விழுந்தன , தோள்புடை விசைத்த காற்றினே . - 4.7.15
4053 - போய்ப் பொடித்தன மயிர் புறத்த , வெம் பொறி ;
காய்ப்பொடு உற்று எழு வட அனலும் கண் கெட
தீப் பொடித்தன , விழி ; தேவர் நாட்டினும்
மீப் பொடித்தன புகை , உயிர்ப்பு வீங்கவே . - 4.7.16
4054 - கை கொடு கை தலம் புடைப்பக் , காவலின்
திக் கயங்களும் , மதம் செருக்கு சிந்தின ;
உக்கன உரும் இனம் ; உலைந்த உம்பரும் ;
நெக்கன , நெரிந்தன , நின்ற குன்றமே . - 4.7.17
4055 - 'வந்தனென் வந்தனென் ' என்ற வாசகம் ,
இந்திரி முதல் திசை எட்டும் கேட்டன ;
சந்திரன் முதலிய தாரகைக் குழாம்
சிந்தின , மணிமுடிச் சிகரம் தீண்டவே . - 4.7.18
4056 - வீசின கரத்தின் வேர்பறிந்த வெற்பு இனம் ,
ஆசையை உற்றன ; அண்டப் பித்திகை
பூசின , வெண் மயிர் பொடித்த வெம் பொறி ;
கூசினன் , அந்தகன் ; குலைந்தது உம்பரே . - 4.7.19
4057 - கடித்த வாய் எயிறு உகு கனல்கள் , கார் விசும்பு
இடித்த வாய் உகும் உரும் இனத்தின் சிந்தின ;
தடித்து வீழ்வன எனத் தகர்ந்து சிந்தின ,
வடித்த தோள் வலயம் அத்து இன் வயங்கு காசு அரோ . - 4.7.20
4058 - ஞாலமும் நால் திசை புனலும் நாகரும்
மூலமும் முற்றிட , முடிவில் தீக்கும் அக்
காலமும் ஒத்தனன் , கடலில் தான் கடை
ஆலமும் ஒத்தனன் , எவரும் அஞ்சவே . - 4.7.21
4059 - போர்க்குச் செல்லுதல் வேண்டாம் என வாலியைத் தாரை விலக்குதல்
ஆ இடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய
வேய் இடை தோளினாள் , இடை விலக்கினாள் ;
வாய் இடை புகை வர , வாலி கண்வரும்
தீய் இடை தன் நெடுங் கூந்தல் தீகின்றாள் . - 4.7.22
4060 - வாலி , அவள் தடையை மீறுதல்
'விலக்கலை , விடு விடு ; விளித்து உளான் உரம்
கலக்கி , அ கடல் கடைந்து அமுது கண்டு என ,
உலக்க இன் உயிர் குடித்து , ஒல்லை மீள்குவன் ,
மலை குலம் மயில் ' என , மடந்தை கூறுவாள் . - 4.7.23
4061 - 'சுக்கிரீவன் வலிய துணையினைப் பெற்றே போருக்கழைக்கின்றான் ' எனத் தாரை கூறுதல்
'கொற்றவ , நின்பெருங் குவவுத் தோள் வலிக்கு
இற்றனன் , முன்னை நாள் , ஈடு உண்டு ஏகினான் ;
பெற்றிலன் பெருந்திறல் ; பெயர்த்தும் போர்செயற்கு
உற்றது , நெடும் துணை உடைமையால் ' என்றாள் . - 4.7.24
4062 - வாலி , தன் பேராற்றலை எடுத்துக் கூறித் தேற்றுதல் (4062-4066)
'மூன்று என முற்றிய முடிவு இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன எனக்கு நேர் எனத்
தோன்றினும் , தோற்று அவை தொலையும் என்றலின்
சான்று உள ; அன்னவை தையல் கேட்டியால் . ' - 4.7.25
4063 - 'மந்தர நெடும் வரை மத்து , வாசுகி
அந்தம் இல் கடைகயிறு , அடைகல் ஆழியான் ,
சந்திரன் தூண் , எதிர் தருக்கின் வாங்குநர்
இந்திரன் முதலிய அமரர் , ஏனையோர் . ' - 4.7.26
4064 - 'பெயர்வு உற வலிக்கவும் மிடுக்கு இல் பெற்றியார்
அயர்வுறல் உற்றதை நோக்கி ' யான் , அது
'தயிர் ' எனக் கடைந்து அவர்க்கு அமுதம் தந்தது ,
மயில் இயல் குயில் மொழி , மறக்கல் ஆவதோ ? ' - 4.7.27
4065 - 'ஆற்றலின் அமரரும் அவுணர் யாவரும்
தோற்றனர் ; ஏனையர் சொல்லற் பாலரோ ?
கூற்றும் என்பெயர் சொல குலையும் , யார் , இனி
மாற்றலற்கு ஆகிவந்து , எதிரும் மாண்பினார் ? ' - 4.7.28
4066 - 'பேதையர் எதிர்குவர் எனினும் பெற்று உடை
ஊதிய வரங்களும் , உரமும் , உள்ளதில்
பாதியும் என்னதால் ; பகைப்பது எங்ஙனம் ?
நீ துயர் ஒழிக ' என , நின்று கூறினான் . - 4.7.29
4067 - 'சுக்கிரீவனுக்குத் துணையாக இராமன் என்பவன் நின்னைக் கொல்லுதற் பொருட்டு வந்துளான் ' எனத் தாரை கூறுதல்
அன்னது கேட்டவள் , 'அரச , `'ஆயவற்கு
இன் உயிர் நட்பு அமைந்து இராமன் என்பவன்
உன் உயிர் கோடலுக்கு உடன் வந்தான் '' எனத்
துன்னிய அன்பினர் சொல்லினார் ' என்றாள் . - 4.7.30
4068 - வாலி , இராமனுடைய நற்பண்புகளை யெடுத்துரைத்துத் தாரையின் கூற்றினை மறுத்தல் (4068-4073)
'உழைத்த வல் இரு வினைக்கு ஊறு காண்கிலாது
அழைத்து அயர் உலகினுக்கு அறத்தின் ஆறு எலாம்
இழைத்தவற்கு , இயல்பு அல இயம்பி என் செய்தாய் ?
பிழைத்தனை , பாவி ! உன் பெண்மையால் ' என்றான் . - 4.7.31
4069 - 'இருமையும் நோக்குறும் இயல்பினாற்கு இது
பெருமையோ ? இங்கு இதிற் பெறுவது என் கொல் ஓ ?
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறு உடை
தருமமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ ? ' - 4.7.32
4070 - 'ஏற்ற பேர் உலகு எலாம் எய்தி , ஈன்றவள்
மாற்றவள் ஏவ , மற்று , அவள்தன் மைந்தனுக்கு
ஆற்ற அரும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலை ; இன்னன புகல்தற் பாலையோ ? ' - 4.7.33
4071 - 'நின்ற பேர் உலகு எலாம் நெருக்கி நேரினும் ,
வென்றி வெம் சிலை அலால் , பிறிது வேண்டுமோ ?
தன்துணை ஒருவரும் தன்னில் வேறு இலான்
புன் தொழில் குரங்கொடு புணரும் நட்பனோ ? ' - 4.7.34
4072 - 'தம்பியர் அல்லது தனக்கு வேறு உயிர்
இம்பரின் இலது ' என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரினில்
அம்பு இடைதொடுக்குமோ , அருளின் ஆழியான் ? ' - 4.7.35
4073 - 'இருத்தி , நீ , இறை , இவண் ; இமைப்பு இல் காலையில்
உருத்தவன் உயிர்குடித்து , உடன் வந்தாரையும்
கருத்து அழித்து எய்துவென் ; கலங்கல் ' என்றனன் ;
விரை குழல் , பின் , உரைவிளம்ப அஞ்சினாள் . - 4.7.36
4074 - போர் வேட்டெழுந்த வாலி ஒரு குன்றின் புறத்தே வந்து தோன்றுதல்
ஒல்லைச் செரு வேட்டு உயர் வெல் புயம் ஓங்கல் உம்பர்
எல்லைக்கும் அப்பால் இவர்கின்ற இரண்டினோடும்
மல்லல் கிரியின்தலை வந்தனன் வாலி , கீழ்பால்
தொல்லைக் கிரியின்தலை தோற்றிய ஞாயிறு என்ன . - 4.7.37
4075 - வாலியின் வீரத் தோற்றம்
நின்றான் , எதிர் யாவரும் நெஞ்சு நடுங்கி அஞ்சத்
தன் தோள் வலியால் தனி மால் வரை சாலும் வாலி ,
குன்றூ ஊடு வந்து உற்றனன் ; கோள் அவுணன் குறித்த
வன் தூண் இடை தோன்றிய மா நரசிங்கம் என்ன . - 4.7.38
4076 - வாலி , சுக்கிரீவனை எதிர்ப்பட்டு ஆரவாரித்தல்
ஆர்க்கின்ற பின்னேன்தனை நோக்கினன் ; தானும் ஆர்த்தான் ;
வேர்க்கின்ற வானத்து உரும் ஏறு வெறித்து வீழ்ந்த ;
போர்க்கின்றது எல்லா உலகும் , பொதிர்வுற்ற பூசல்
கார் குன்றம் அன்னான் நிலம் தாவிய கால் இது என்ன . - 4.7.39
4077 - வாலி சுக்கிரீவரது போர்த் தோற்றத்தைக் கண்டு வியந்த இராமன் , அதனை இலக்குவனுக்குக் காட்டிக் கூறுதல்
அ வேலை , இராமனும் , அன்புடைத் தம்பிக்கு 'ஐய ,
செவ்வே செலநோக்குதி ; தானவர் தேவர் நிற்க ,
எ வேலை , எ மேகம் , எ கால் ஒடு எக்கால வெம் தீ
வெவ்வேறு உலகத்து இவன் மேனியை மானும் ? ' என்றான் . - 4.7.40
4078 - 'சுக்கிரீவனது ஒவ்வாச்செயல் நினைந்து உணர்விழந்தேன் ' என இலக்குவன் கூறுதல்
வள்ளற்கு இளையான் பகர்வான் : 'இவன் தம்முன் வாழ்நாள்
கொள்ளக் கொடுங் கூற்றுவனைக் கொணர்ந்தான் ; குரங்கின்
எள்ளற்கு உறு போர் செய எண்ணினன் , என்னும் என்னல்
உள்ளத்தின் ஊன்ற , உணர்வு உற்றிலன் ஒன்றும் ' என்றான் . - 4.7.41
4079 - ஆற்றாது பின்னும் பகர்வான் , 'அறம் அத்து ஆறு அழுங்கத்
தேற்றாது செய்வார்களைத் தேறுதல் செவ்விது அன்றால் ;
மாற்றான் எனத் தம்முனைக் கொல்லிய வந்து நின்றான் ,
வேற்றார்கள் திறத்து இவன் தஞ்சம் என் ? வீர ! ' என்றான் . - 4.7.42
4080 - இலக்குவனுக்கு இராமன் ஏற்ற மறுமொழி பகர்தல் (4080-4081)
'அத்தா ! இது கேள் ' என ஆரியன் கூறுவான் : 'இப்
பித்து ஆய விலங்கின் ஒழுக்கினைப் பேசல் ஆமோ ?
எ தாயர் வயிற்றினும் பின் பிறந்தார்கள் எல்லாம்
ஒத்தால் , பரதன் பெரிது உத்தமன் ஆவது உண்டோ ? ' - 4.7.43
4081 - 'வில் தாங்கு வெற்பு அன்ன , இலங்கு எழில்
தோள ! `'மெய்ம்மை
உற்றார் சிலர் , அல்லவரே பலர் ''
என்பது உண்மை ;
பெற்றார் உழைப் பெற்ற பயன் பெறும்
பெற்றி அல்லால் ,
” அற்றார் நவை '' என்றலுக்கு ஆகுநர்
ஆர் கொல் ? ' என்றான் . - 4.7.44
4082 - வாலி சுக்கிரீவர் இருவரும் நெருங்கிப் பொருதல்
வீரத் திறலோர் , இவை இன்ன விளம்பும் வேலை ,
தேரில் திரிவான் மகன் , இந்திரன் செம்மல் , என்று இப்
பாரில் திரியும் பனி மால் வரை அன்ன பண்பார் ,
மூரித் திசை யானை இரண்டு என , முட்டினாரே . - 4.7.45
4083 - இருவரும் சாரிதிரிதல்
குன்றோடு குன்று ஒத்தனர் ; கோள் அரிக் கொற்ற வல் ஏறு
ஒன்றோடு சென்று ஒன்று எதிர் உற்றனவேயும் ஒத்தார் ;
நின்றார் , திரிந்தார் நெடுஞ்சாரி ; நிலம் திரிந்த ,
வன் தோள் குயவன் திரி மண் கலம் அத்து ஆழி என்ன . - 4.7.46
4084 - இருவரும் தாக்கிப் பொருதலால் தீ எழும் தோற்றம்
தோளோடு தோள் தேய்த்தலின் , தொல் நிலம்
தாங்கல் ஆற்றாத்
தாளோடு தாள் தேய்த்தலின் , தந்த
தழற் பிறங்கல் ,
வாளோடு மின் ஓடுவபோல் நெடு
வானின் ஓடும் ;
கோளோடு கோள் உற்றென ஒத்து ,
அடர்ந்தார் , கொதித்தார் . - 4.7.47
4085 - அவ்விருவரும் சுந்தோப சுந்தரை யொத்துத் தோன்றுதல்
தம் தோள் வலி மிக்கவர் , தம் ஒருதாய் வயிற்றின்
வந்தோர் , மட மங்கை பொருட்டு மலைக்கலுற்றார் ;
சிந்து ஓடு அரி ஒன் கண் திலோத்தமை காதல் செற்ற
சுந்தோப சுந்தப் பெயர்த் தொல்லையினோரும் ஒத்தார் . - 4.7.48
4086 - இருவரும் செய்த பெரும் போர்
கடல் ஒன்றினொடு ஒன்று மலைக்கவும் , காவல் மேருத்
திடல் ஒன்றினொடு ஒன்று அமர்செய்யவும் , சீற்றம் என்பது
உடல்கொண்டு இரண்டு ஆகி உடற்றவும் , கண்டிலாதேம் ;
மிடல் இங்கு இவர் வெம் தொழில் கு ஒப்பு உரை வேறு காணேம் . - 4.7.49
4087 - இருவரது கடும் போரைக் காண அஞ்சித் தேவர்கள் ஓடி மறைதல்
ஊகங்களின் நாயகர் வெங்கண் உமிழ்ந்த தீயால் ,
மேகங்கள் எரிந்தன ; வெற்பும் எரிந்த ; திக்கின்
நாகங்கள் நடுங்கின ; நால் நிலமும் குலைந்த ;
மாகங்களை நண்ணிய விண்ணவர் போய் மறைந்தார் . - 4.7.50
4088 - இருவரும் வானிலும் மண்ணிலும் தொடர்ந்து ஓடிப் பொருதல்
'விண் மேலினரோ ? நெடுவெற்பின் முகட்டினாரோ ?
மண் மேலினரோ ? புற மாதிர வீதியாரோ ?
கண் மேலினரோ ? ' என யாவரும் காண நின்றார் ,
புண் மேல் இரத்தம் பொடிப்பக் கடிப்பார் , புடைப்பார் . - 4.7.51
4089 - அவ்விருவரது போர் முழக்கமும் குத்துதலின் ஓசையும்
ஏழ் ஒத்து உடன் ஆம் , திசை எட்டு ஒடு இரண்டும் முட்டும்
ஆழிக் கிளர் ஆர்கலிக்கு ஐம்மடங்கு , ஆர்ப்பின் ஓசை ;
பாழி தடம் தோளினும் மார்பினும் கைகள் பாய ,
ஊழிக் கிளர் கார் உரும் ஒத்தது , குத்தும் ஓதை . - 4.7.52
4090 - ஒருவரையொருவர் கடித்தலாற் பொடித்த இரத்தம் விண்மீன்களிலும் மேகத்திலும் படிந்த தோற்றம்
வெம் வாய் எயிற்றால் மிடல் வீரர் கடிப்ப மீச்சென்று
அ வாய் எழு சோரி அது , ஆசைகள் தோறும் வீச ,
எ வாய் உம் எழுந்த கொழுஞ்சுடர் மீன்கள் யாவும் ,
செம் வா ஐ நிகர்த்தன ; செக்கரை ஒத்த , மேகம் . - 4.7.53
4091 - வாலியின் தோள்களும் சுக்கிரீவன் மார்பும் தகர்தல்
வெந்த வல் இரும்பு இடை நெடுங் கூடங்கள் வீழ்ப்பச்
சிந்தி எங்கணும் சிதறுவபோல் , பொறி தெறிப்ப ,
இந்திரன்மகன் புயங்களும் , இரவிசேய் உரனும் ,
சந்த வல் நெடுந் தட கைகள் தாக்கலின் தகர்வ . - 4.7.54
4092 - இருவரும் செய்த போர்ச் செயல்கள் (4092-4096)
உரத்தினால் மடுத்து உந்துவர் , பாதம் இட்டு உதைப்பர் ;
கரம் அத்து இன் ஆல் விசைத்து எற்றுவர் ; கடிப்பர் ; நின்று இடிப்பர் ;
மரத்தினால் அடித்து உரப்புவர் ; பொருப்பு இனம் வாங்கிக்
சிரம் அத்து இன் மேல் எறிந்து உறுக்குவர் ; தெழிப்பர் ; தீ விழிப்பர் . - 4.7.55
4093 - எடுப்பர் பற்றி உற்று ஒருவரை ஒருவர் விட்டு எறிவர் ;
கொடுப்பர் வந்து உரம் ; குத்துவர் கை தலம் குளிப்ப ;
கடுப்பினில் பெருங் கறங்கு எனச் சாரிகை பிறங்கத்
தடுப்பர் ; பின்றுவர் , ஒன்றுவர் , தழுவர் , விழுவர் . - 4.7.56
4094 - வாலினால் உரம் வரிந்தனர் , நெரிந்து உக வலிப்பர் ;
காலினால் நெடும் கால் பிணித்து உடற்றுவர் ; கழல்வர் ;
வேலினால் அற எறிந்து என , விறல் வலி உகிரால் ,
தோலின் ஆர் உடல் , நெடுவரை முழை எனத் தொளைப்பர் . - 4.7.57
4095 - மண் அகத்தன மலைகளும் , மரங்களும் , மற்றும்
கண் அகத்தினில் தோன்றிய யாவையும் , கையால் ,
எண் நக பறித்து எறிதலின் , எற்றலின் , இற்ற ;
விண் அகத்தினை மறைத்தன ; மறிகடல் வீழ்ந்த . - 4.7.58
4096 - வெருவிச் சாய்ந்தனர் , விண்ணவர் ; வேறு என்னை விளம்பல் ?
ஒருவர்க்கு ஆண்டு அமர் ஒருவரும் தோற்றிலர் ; உடன்று
செருவில் தேய்த்தலின் , செங்கனல் வெண்மயிர் செல்ல ,
முரிபுல் கான் இடை எரிபரந்தன என முனைவார் . - 4.7.59
4097 - வாலி , சுக்கிரீவனைத் தாக்கி வருத்துதல்
அன்ன தன்மையர் ஆற்றலின் அமர்புரி பொழுதின் ,
வல் நெடும் தடம் திரள் புயத்து அடுதிறல் வாலி ,
சொன்ன தம்பியைத் தும்பியை அரி தொலைத்து என்ன
கொன் நகங்களின் , கரங்களின் குலைந்து உக மலைந்தான் . - 4.7.60
4098 - வாலியால் தாக்கப்பட்டு வருந்திய சுக்கிரீவன் , இராமனை யடைந்து அவன் பணித்தவாறு அடையாளமாலை மிலைந்து சென்று பொருதல்
மலைந்தபோது இனைந்து , இரவிசேய் , ஐயன்மாட்டு அணுகி ,
உலைந்த சிந்தையோடு உணங்கினன் , வணங்கிட , 'உள்ளம்
குலைந்திடேல் ; உமை வேற்றுமை தெரிந்திலம் ; கொடி பூ
மிலைந்து செல்க ' என விடுத்தனன் ; எதிர்த்தனன் மீட்டும் . - 4.7.61
4099 - சுக்கிரீவன் வாலியைத் தாக்குதல்
தயங்கு தாரகை நிரை தொடுத்து அணிந்தன போல ,
வயங்கு சென்னியன் , வயம் புலி வானவல் ஏற்றோடு
உயங்கும் ஆர்ப்பினன் , ஒல்லை வந்து , அடு திறல் வாலி
பயம் கொளப் புடைத்து , எற்றினன் ; குத்தினன் , பல கால் . - 4.7.62
4100 - வாலி சுக்கிரீவனை உயிர்த்தலத்தில் புடைத்து உதைத்தல்
அயிர்த்த சிந்தையன் , அந்தகன்
குலைகுலைந்து அஞ்சச்
செயிர்த்து நோக்கினன் ; சினத்தொடு
சிறுநகை செய்யா ,
வயிர்த்த கையினும் , காலினும் ,
கதிர்மகன் மயங்க ,
உயிர்த் தலந்தொறும் புடைத்தனன் ;
அடித்தனன் ; உதைத்தான் . - 4.7.63
4101 - வாலியினால் நெருக்கப்பட்டுக் கலங்கிய சுக்கிரீவன் இராமனிருக்கின்ற திசைநோக்கி விழித்தல்
கக்கினான் உயிர் , உயிர்ப்பொடும் ; செவிகளின் , கண்ணின்
உக்கது , ஆங்கு எரி படலை ஓடு உதிரத்தின் ஓதம் ;
திக்கு நோக்கினன் , செம் கதிரோன் மகன் ; செருக்கிப்
புக்கு , மீக்கொடு நெருக்கினன் , இந்திரன் புதல்வன் . - 4.7.64
4102 - வாலி சுக்கிரீவனை நிலத்தில் மோதுதற்குப்பற்றி மேலே தூக்கியபொழுது இராமன் வாலியின்மேல் அம்பு செலுத்தல்
'எடுத்துப் பார் இடை எற்றுவன் , பற்றி ' என்று இளவல்
கடி தலம் அத்து இன் உம் , கழுத்தினும் , தன் இருகரங்கள்
மடுத்து , மீ கொண்ட வாலிமேல் , கோல் ஒன்று வாங்கித்
தொடுத்து , நாணொடு தோள் உறுத்து , இராகவன் துரந்தான் . - 4.7.65
4103 - இராமபாணம் வாலியின் மார்பை எளிதில் துளைத்தல்
காரும் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியிற் சென்றது நின்றது என் செப்ப ?
நீரும் , நீர்தரு நெருப்பும் , வன் காற்று உம் , கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அப் பகழி . - 4.7.66
4104 - வாலி கலங்கி விழுதல்
அலங்கு தோள் வலி அழிந்த தன் தம்பியை அருளான் ,
வலம்கொள் பார் இடை எற்றுவான் உற்ற போர் வாலி ,
கலங்கி , வல்விசைக் கால் கிளர்ந்து எறிவு உற கடை கால்
விலங்கல் மேருவும் வேர் பறிந்தால் என , வீழ்ந்தான் . - 4.7.67
4105 - வாலி , சுக்கிரீவனைப் பற்றிய பிடியில் நெகிழ்ந்து , தன் மார்பில் தைத்த அம்பினைக் கையினால் இறுகப் பற்றுதல்
சையம் வேரொடும் உரும் உறச் சாய்ந்தெனச் சாய்ந்தான் ,
வையம் மீதிடைக் கிடந்த , போர் அடுதிறல் வாலி ,
வெய்யவன் தரு மதலையை மிடல்கொடு கவரும்
கை நெகிழ்ந்தனன் ; நெகிழ்ந்திலன் , கடும் கணை கவர்தல் . - 4.7.68
4106 - வெற்றி வீரனது அடுகணை , அவன்மிடல் உரம் அத்து ஊடு
உற்றது ; அ புறத்து உறாதமுன் , உறு வலி கரத்தால்
பற்றி , வாலினும் காலினும் பறித்து அகப்படுத்தான் ;
கொற்ற வெங் கொடு மறலியும் சிரம் தலம் குலைந்தான் . - 4.7.69
4107 - வாலியின் சீற்றமும் ஐயமும்
எழுந்து , 'வான் முகடு இடித்து
உகப் படுப்பல் ' என்று , இவரும் ;
'உழுந்து பேரு முன் , திசை திரிந்து
இறுப்பல் ' என்று உறுக்கும் ,
விழுந்து 'பாரினை வேரொடும்
பறிப்பல் ' என்று ஓரும் ;
'அழுந்தும் இச்சரம் எய்தவன்
ஆர்கொல் ? ' என்று அயிர்க்கும் . - 4.7.70
4108 - வாலி தன் மார்பில் தைத்த அம்பினைப் பற்றிப் பறிக்க முயன்று பறிக்க வாராமையின் வருந்துதல்
எற்றும் , கையினை நிலத்தொடும் ; எரிப் பொறி பறப்பச்
சுற்றும் நோக்குறும் ; சுடு சரத்தினைத் துணைக் கரத்தால்
பற்றி , வாலினும் காலினும் வலி உறப் பறிப்பான்
உற்று , உறாமையின் உலைவுறும் ; மலை என உருளும் . - 4.7.71
4109 - வாலி , தன்மேற் படைக்கலம் எய்தோர் யாவரோ என ஐயுறுதல்
'தேவரோ ? ' என அயிர்க்கும் ; 'அத்தேவர் இ செயலுக்கு
ஆவரோ ? அவர்க்கு ஆற்றல் உண்டோ ? ' எனும் ; 'அயலோர்
யாவரோ ? ' என நகைசெயும் ; 'ஒருவனே இறைவர்
மூவரோடும் ஒப்பான் செயலாம் ' என மொழியும் . - 4.7.72
4110 - வாலி , தன்னுயிரை வாங்கிய படைக்கலம் எத்தகையதோ என ஐயுறுதல்
'நேமி தான் கொலோ ? நீலகண்டன்
நெடுஞ் சூலம்
ஆம் இது , ஆம் கொலோ ? அன்று எனின் ,
குன்று உருவு அயிலும் ,
நாம இந்திரன் வச்சிரப்
படையும் , என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ ?
யாது ? ' எனப் புழுங்கும் . - 4.7.73
4111 - வாலி , தன்னுயிரைக் கவர்ந்த படைக்கலத்தின் ஆற்றலை வியந்து அப்படைக்கலம் அம்பு என்பதனைக் கண்டறிதல்
'வில்லினால் துரப்ப அரிது , இவ்
வெம் சரம் ! ' என வியக்கும் ;
'சொல்லினால் நெடு முனிவரோ
தூண்டினார் ? ' என்னும் ;
பல்லினால் கடிப்புறும் பல
காலும் ; தன் உரத்தைக்
கல்லி , ஆர்ப்பொடும் பறிக்கும் அப்
பகழியைக் கண்டான் . - 4.7.74
4112 - அம்பினை எய்தவன் பெயர் யாதென அறிய எண்ணி வாலி தன் வன்மையால் அதனைப் பறித்தெடுத்தல் (4112-4113)
'சரம் எனும்படி தெரிந்தது ; பலபடச் சலித்து என் ?
உரம் எனும் பதம் உயிரொடும் உருவிய ஒன்றைக்
கரம் இரண்டினும் காலினும் வாலினும் கழற்றிப்
பரமன் அன்னவன் பெயர் அறிவேன் ' எனப் பறிப்பான் . - 4.7.75
4113 - ஓங்கு அரும் பெருந் திறல் உடை மனத்தன் , உள்ளத்தன் ,
வாங்கினான் மற்று அவ் வாளியை , ஆளிபோல் வாலி ;
ஆங்கு நோக்கினர் அமரரும் அவுணரும் பிறரும் ,
வீங்கினார்கள் தோள் ; வீரரை யார் வியவாதார் ? - 4.7.76
4114 - வாலி அம்பினைப் பறித்த அளவில் அவனது மார்பினின்றும் உதிரம் வெள்ளமெனப் பெருகுதல்
மூடு தெண் திரை முரிதரு கடல் என முழங்கி
ஈடு பேர் உலகு இறந்துளது ஆம் எனற்கு எளிதோ ?
காடும் மா நெடு விலங்கலும் கடந்தது ; அக் கடலின்
ஊடு போதல் உற்று அதனை ஒத்து உயர்ந்து உளது உதிரம் . - 4.7.77
4115 - வாலியின் மார்பிற் பெருகிய குருதிப் பெருக்கைக் கண்ட சுக்கிரீவன் உடன்பிறப்பென்னும் பாசத்தால் கண்ணீர் மல்கி நிலத்தில் வீழ்தல்
வாசத் தாரவன் மார்பு எனும் மலை வழங்கு அருவி
ஓசைச் சோரியை நோக்கினன் ; உடன் பிறப்பு என்னும்
பாசம் அத்து ஆல் பிணிப்பு உண்ட அத் தம்பியும் , பசும் கண்
நேசத் தாரைகள் சொரிதர , நெடுநிலம் சேர்ந்தான் . - 4.7.78
4116 - தன் மார்பில் தைத்து வருத்திய அம்பினைப் பறித்தெடுத்த வாலி அதன்கண் இராமனது பெயர் பொறிக்கப் பெற்றிருத்தலைக் காணுதல் (4116-4117)
பறித்த வாளியைப் பரு வலித்
தடக்கையால் பற்றி ,
'இறுப்பென் ' என்று கொண்டு எழுந்தனன் ,
மேருவை இறுப்போன் ;
'முறிப்பென் என்னினும் முறிவது அன்றாம் '
என மொழியாப் ,
பொறித்த நாமத்தை அறிகுவான்
நோக்கினன் , புகழோன் . - 4.7.79
4117 - மும்மை சால் உலகுக்கு எல்லாம்
மூல மந்திரத்தை , முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப் பெரும் பதத்தை , தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை , 'இராமன் ' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னைக்
கண்களின் தெரியக் கண்டான் . - 4.7.80
4118 - இராமனது செயல் நினைந்து , வாலி நாணி வருந்துதல் (4118-4119)
'இல் அறம் துறந்த நம்பி ,
எம்மனோர்க்கு ஆகத் தங்கள்
வில் அறம் துறந்த வீரன் ,
தோன்றலால் , வேத நூலில்
சொல் அறம் துறந்திலாத
சூரியன் மரபும் , தொல்லை
நல் அறம் துறந்தது ' என்னா ,
நகை வர , நாண் உள் கொண்டான் . - 4.7.81
4119 - வெள்கிடும் ; மகுடம் சாய்க்கும் ;
வெடிபடச் சிரிக்கும் ; மீட்டும்
உள்கிடும் ; 'இதுவும் தான் ஓர்
ஓங்கு அறமோ ? ' என்று உன்னும் ;
முள்கிடும் குழியில் புக்க
மூரிவெம் களி நல் யானை
தொள் கொடும் கிடந்தது என்னத் ,
துயர் உழந்து அழிந்து சோர்வான் . - 4.7.82
4120 - 'இராமன் முறை திறம்பினான் ' என்று கூறி வருந்தும் வாலியின் முன்னே இராமன் வந்து தோன்றுதல்
'இறை திறம்பினனால் ; என்னே
இழிந்துளோர் இயற்கை ? என்னில்
முறை திறம்பினனால் ' என்று
மொழிகின்ற முகத்தான் முன்னர் ,
மறை திறம்பாத வாய்மை
மன்னர்க்கு முன்னம் சொன்ன
துறை திறம்பாமல் காக்கத்
தோன்றினான் , வந்து தோன்ற . - 4.7.83
4121 - இராமனைக் கண்ணுற்ற வாலி , 'நின்செயல் முறையற்றது '
எனக் கூறி இகழ்தல் (4121-4136)
கண்ணுற்றான் வாலி ,
நீலக் கார்முகில் , கமலம் பூத்து ,
மண் உற்று வரிவில் ஏந்தி ,
வருவதே போலும் மாலை ;
புண் உற்றது அனைய சோரி
பொறியொடும் பொடிப்ப , நோக்கி ,
'எண் உற்றாய் என் செய்தாய் ? ' என்று ,
ஏசுவான் இயம்பல் உற்றான் . - 4.7.84
4122 - 'வாய்மையும் மரபும் காத்து
மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன் மைந்தனே ! நீ
பரதன் முன் தோன்றினாயே ;
தீமைதான் பிறரைக் காத்துத்
தான் செய்தால் தீங்கு அன்று ஆம் ஓ ?
தாய்மையும் அன்றி நட்பும்
தருமமும் தழுவி நின்றாய் . - 4.7.85
4123 - குலம் இது ; கல்வி ஈது ;
கொற்றம் ஈது ; உற்று நின்ற
நலம் இது ; புவனம் மூன்றும்
நாயகம் உன்னது அன்றோ ?
வலம் இது ; இவ் உலகம் தாங்கும்
வண்மை ஈது ; என்றால் திண்மை
அலமரச் செய்யலாமோ ,
அறிந்திருந்து அயர்ந்துளார் போல் . - 4.7.86
4124 - 'கோ இயல் தருமம் உங்கள்
குலத்து உதித்தோர்கட்கு எல்லாம் -
ஓவியத்து எழுத ஒண்ணா
உருவத்தாய் ; - உடைமை அன்றோ ?
ஆவியை , சனகன் பெற்ற
அன்னத்தை , அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை ,
திகைத்தனை போலும் , செய்கை . ' - 4.7.87
4125 - 'அரக்கர் ஓர் அழிவு செய்து
கழிவரேல் , அதற்கு வேறு ஓர்
குரக்கு இனத்து அரசைக் கொல்ல
மனுநெறி கூறிற்று உண்டோ ?
இரக்கம் எங்கு உகுத்தாய் ? என்பால்
எப் பிழை கண்டாய் ? அப்பா !
பரக்கழி இது நீ பூண்டால் ,
புகழை யார் பரிக்கற் பாலார் ? ' - 4.7.88
4126 - 'ஒலி கடல் உலகம் தன்னில்
ஊர்தரு குரங்கின் மாடே
கலியது காலம் வந்து
பரந்ததோ ? கருணை வள்ளால் !
மெலியவர் பாலதேயோ ,
ஒழுக்கமும் , விழுப்பம் தானும் ?
வலியவர் மெலிவு செய்தால்
புகழ் அன்றி வசை இன்று ஆமோ ? ' - 4.7.89
4127 - 'கூட்டு ஒருவரையும் வேண்டாக்
கொற்றவ ! பெற்ற தாதை
பூட்டிய செல்வம் ஆங்கே
தம்பிக்குக் கொடுத்துப் போந்து ,
நாட்டு ஒரு கருமம் செய்தாய் ;
எம்பிக்கு இவ் அரசை நல்கி ,
காட்டு ஒரு கருமம் செய்தாய் ;
கருமம்தான் இதன்மேல் உண்டோ ? ' - 4.7.90
4128 - 'அறை கழல் அலங்கல் வீரர்
ஆயவர் புரிவது , ஆண்மைத்
துறை ' எனல் ஆயிற்று அன்றே ?
தொன்மையின் நல் நூல் கு எல்லாம்
இறைவன் நீ , என்னைச் செய்தது ,
ஈது எனில் , 'இலங்கை வேந்தன்
முறை அ(ல்)ல செய்தான் ' என்று
முனிதியோ ? முனிவு இலாதாய் ' - 4.7.91
4129 - 'இருவர் போர் எதிரும் காலை ,
இருவரும் நல் உற்றாரே ;
ஒருவர்மேல் கருணை தூண்டி ,
ஒருவர்மேல் ஒளித்து நின்று ,
வரி சிலை குழைய வாங்கி ,
வாய் அம்பு மருமம் அத்து எய்தல்
தருமமோ ? பிறிது ஒன்று ஆமோ ?
தக்கிலது என்னும் பக்கம் . ' - 4.7.92
4130 - 'வீரம் அன்று ; விதி அன்று ; மெய்ம்மையின்
வாரம் அன்று ; நின் மண்ணினுக்கு என் உடல்
பாரம் அன்று ; பகை அன்று ; பண்பு ஒழிந்து ,
ஈரம் அன்று இது ; என் செய்தவாறு நீ ? ' - 4.7.93
4131 - 'இருமை நோக்கி நின்று , யாவர்க்கும் ஒக்கின்ற
அருமை ஆற்றல் அன்றோ அறம் காப்பது ?
பெருமை என்பது , இது என் ? பிழை பேணல் விட்டு
ஒருமை நோக்கி ஒருவற்கு உதவல் ஓ ? ' - 4.7.94
4132 - 'செயலைச் செற்ற பகை தெறுவான் தெரிந்து ,
அயலைப் பற்றித் துணை அமைந்தாய் எனின் ,
புயலைப் பற்றும் அப் பொங்கு அரி போக்கி , ஓர்
முயலைப் பற்றுவது , என்ன முயற்சியோ ? ' - 4.7.95
4133 - 'கார் இயன்ற நிறத்த களங்கம் ஒன்று
ஊர் இயன்ற மதிக்கு உளது ஆம் என ,
சூரியன் மரபுக்கும் ஒர் தொல் மறு ,
ஆரியன் ! பிறந்து ஆக்கினை ஆம் அரோ ! ' - 4.7.96
4134 - 'மற்று ஒருத்தன் வலிந்து அறைகூவ , வந்து
உற்ற என்னை , ஒளித்து , உயிர் உண்ட நீ ,
இற்றையில் , பிறர்க்கும் 'இகல் ஏறு ' என
நிற்றி போலும் ? கிடந்த நிலத்து அரோ . ' - 4.7.97
4135 - 'நூல் இயற்கையும் , நும் குலத்து உந்தையர்
போல் இயற்கையும் , சீலமும் , போற்றலை ;
வாலியைப் படுத்தாய் அ(ல்)லை ; மன் அற
வேலியைப் படுத்தாய் விறல் வீரனே ! ' - 4.7.98
4136 - 'தாரம் மற்று ஒருவன் கொள , தன் கையில்
பார வெம் சிலை வீரம் பழிப்பதே !
நேரும் அன்று , மறைந்து , நிராயுதன்
மார்பின் எய்யவோ வில் இகல் வல்லதே ? ' - 4.7.99
4137 - வாலியின் மொழிகளுக்கு இராமன் மறுமொழி கூறுதல் (4137-4148
என்று , தானும் எயிறு பொடி படத்
தின்று , காந்தி , விழி வழித் தீ உக
அன்று அ(வ்)வாலி அனையன கூறினான் ;
நின்ற வீரன் இனைய நிகழ்த்தினான் . - 4.7.100
4138 - ” பிலம் புக்காய் நெடு நாள் பெயராய் '' எனாப்
புலம்பு உற்று , உன் வழிப் போதல் உற்றான் தனை ,
குலம் புக்கு ஆன்ற முதியர் , ” குறிக்கொள் நீ
அலம் பொன் தாரவனே ! அரசு '' என்றலும் . - 4.7.101
4139 - ” வானம் ஆள என் தன்முனை வைத்தவன்
தானும் மாளக் , கிளையின் இறத் தடிந்து ,
யானும் மாள்வென் ; இருந்து அரசு ஆள்கிலென் ;
ஊனம் ஆன உரை பகர்ந்தீர் '' என , - 4.7.102
4140 - 'பற்றி , ஆன்ற படைத் தலை வீரரும்
முற்று உணர்ந்த முதியரும் முன்பரும்
'இற்றது , உம் அரசு , எய்தலையேல் ' என ,
கொற்ற நன் முடி கொண்டது , இக் கோதிலான் . ' - 4.7.103
4141 - 'வந்த உன்னை வணங்கி மகிழ்ந்தனன் ;
” எந்தை ! என் கண் , இனத்தவர் ஆற்றலால்
தந்தது உன் அரசு '' என்று , தரிக்கலான்
முந்தை உற்றது சொல்ல , முனிந்து நீ . ' - 4.7.104
4142 - 'கொல்லல் உற்றனை , உம்பியை ; கோது அவற்கு
இல்லை என்பது உணர்ந்தும் இரங்கலை ;
” அல்லல் செய்யேல் ; உனக்கு அபயம் ; பிழை
புல்லல் '' என்னவும் , புல்லலை , பொங்கினாய் . ' - 4.7.105
4143 - 'ஊற்றம் முற்று உடையான் , ” உனக்கு ஆர் அமர்
தோற்றும் '' என்று தொழுது உயர் கையனைக்
” கூற்றம் உண்ணக் கொடுப்பன் '' என்று எண்ணினாய் ;
நால் திசைக்கும் புறத்தையும் நண்ணினான் . ' - 4.7.106
4144 - 'அன்ன தன்மை அறிந்தும் , அருளலை ;
பின்னவன் இவன் என்பதும் பேணலை ;
வன்னிதான் இடு சாப வரம்புடைப்
பொன் மலைக்கு இவன் நண்ணலின் , போகலை ; ' - 4.7.107
4145 - 'ஈரம் ஆவதும் , இற் பிறப்பு ஆவதும் ,
வீரம் ஆவதும் , கல்வியின் மெய்ந் நெறி
வாரம் ஆவதும் , மற்று ஒருவன் புணர்
தாரம் ஆவது தாங்கும் தருக்கு அரோ . ' - 4.7.108
4146 - 'மறம் திறம்பல் , ” வலியம் '' எனா , மனம்
புறம் திறம்ப , எளியவர்ப் பொங்குதல் ;
அறம் திறம்பல் , அருங் கடி மங்கையர்
திறம் திறம்பல் ; - தெளிவு உடையோர்க்கு எலாம் . ' - 4.7.109
4147 - 'தருமம் இன்னது எனும் தகைத் தன்மையும்
இருமையும் தெரிந்து எண்ணலை ; எண்ணினால் ,
அருமை உம்பிதன் ஆர் உயிர் தேவியைப்
பெருமை நீங்கினை , எய்தப் பெறுதியோ ? ' - 4.7.110
4148 - 'ஆதலானும் , அவன் எனக்கு ஆருயிர்க்
காதலான் எனலானும் , நின் கட்டனென் ;
ஏதிலாரும் , எளியர் என்றால் , அவர்
தீது தீர்ப்பது என் சிந்தைக் கருத்து அரோ . ' - 4.7.111
4149 - இராமன் கூறிய மாற்றங்களுக்கு வாலி எதிர்மொழி பகர்தல் (4149-4152)
'பிழைத்த தன்மை இது ' எனப் பேர் எழில்
தழைத்த வீரன் உரை செய , தக்கிலாது
இழைத்த வாலி , 'இயல்பு அல , இ துணை ;
விழைத் திறம் , தொழில் ' என்று விளம்புவான் . ' - 4.7.112
4150 - 'ஐய ! நுங்கள் அரும் குலம் கற்பின் அப்
பொய் இல் மங்கையர்க்கு ஏய்ந்த புணர்ச்சி போல்
செய்திலன் , எமைத் தேம் மலர் மேலவன் ;
எய்தின் எய்தியது ஆக இயற்றினான் . ' - 4.7.113
4151 - 'மணமும் இல்லை , மறை நெறி வந்தன ;
குணமும் இல்லை , குல முதற்கு ஒத்தன ;
உணர்வு சென்ற உழி செல்லும் ஒழுக்கு அலால் -
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய் ! ' - 4.7.114
4152 - 'பெற்றி மற்று இது ; பெற்றது ஒர் பெற்றியின்
குற்றம் உற்றிலென் ; நீ அது கோடியால் -
வெற்றி உற்றது ஒர் வெற்றியினாய் ! ' எனச்
சொற்ற சொல் தகைக்கு உற்றது சொல்லுவான் : - 4.7.115
4153 - 'குற்றமுற்றிலேன் ' என வாலி கூறிய மொழிகளை இராமன் மறுத்து , அவன் செய்த
செயல் குற்றமுடையதே என்பதனை வலியுறுத்தல் (4153-4166)
நலம் கொள் தேவரின் தோன்றி , நவை அற ,
கலங்கலாது , அற நல் நெறி காண்டலின் ,
விலங்கு அலாமை விளங்கியது ; ஆதலான்
அலங்கலார்க்கு இது அடுப்பது அன்று ஆம் அரோ . - 4.7.116
4154 - 'பொறியின் யாக்கையதோ ? புலன் நோக்கிய
அறிவின் மேலது அன்றோ , அறம் அத்து ஆறு தான் ?
நெறியின் நோன்மையை நேர் நின்று உணர்ந்த நீ
பெறுதியோ பிழை உற்று உறு பெற்றிதான் ? - 4.7.117
4155 - 'மாடு பற்றி இடங்கர் வலித்திட ,
கோடு பற்றிய கொற்றவற் கூயது ஓர்
பாடு பெற்ற உணர்வின் பயத்தினால் ,
வீடு பெற்ற விலங்கும் விலங்கு அது ஓ ? ' - 4.7.118
4156 - 'சிந்தை நல் அறத்தின் வழிச் சேர்தலால் ,
பைந் தொடித் திருவின் பரிவு ஆற்றுவான் ,
வெந் தொழில் துறை வீடு பெற்று எய்திய
எந்தையும் , எருவைக்கு அரசு அல்லனோ ? ' - 4.7.119
4157 - 'நன்று , தீது , என்று இயல் தெரி நல் அறிவு
இன்றி வாழ்வது அன்றோ , விலங்கின் இயல் ?
நின்ற நல் நெறி , நீ அறியா நெறி
ஒன்றும் இன்மை , உன் வாய்மை உணர்த்துமால் . ' - 4.7.120
4158 - 'தக்க இன்ன , தகாதன இன்ன , என்று
ஒக்க உன்னலர் ஆயின் , உயர்ந்துள
மக்களும் , விலங்கே ; மனுவின் நெறி
புக்கவேல் , அவ் விலங்கும் புத்தேளிரே . ' - 4.7.121
4159 - 'காலன் ஆற்றல் கடிந்த கணிச்சியான் -
பாலின் ஆற்றிய பத்தி பயத்தலால் ,
மாலினால் தரு வன் பெரும் பூதங்கள்
நாலின் ஆற்றலும் ஆற்றுழி நண்ணினாய் . ' - 4.7.122
4160 - மே வரும் தருமம் துறை மேவினார் ,
ஏவரும் , பவத்தால் இழிந் தோர்களும் ;
தா வரும் தவரும் , பல தன்மை சால்
தேவரும் , உளர் , தீமை திருத்தினார் . - 4.7.123
4161 - 'இனையது ஆதலின் , எக் குலத்து யாவர்க்கும் ,
வினையினால் வரும் , மேன்மையும் கீழ்மையும் ;
அனைய தன்மை அறிந்தும் , அழித்தனை ,
மனையின் மாட்சி ' என்றான் மனு நீதியான் . - 4.7.124
4162 - 'நேர் நின்று அம்பு எய்யாமல் மறைந்து நின்று அம்பு எய்தது எது கருதி '
என வாலி இராமனை வினாதல்
அவ் உரை அமையக் கேட்ட
அரி குலத்து அரசு , 'மாண்ட
செவ்வியோய் ! அனையது ஆக ;
செரு களம் அத்து உருத்து எய்யாதே
வெவ்விய புளிஞர் என்ன ,
விலங்கியே மறைந்து , வில்லால்
எவ்வியது என்னை ? ' என்றான் ;
இலக்குவன் இயம்பல் உற்றான் . - 4.7.125
4163 - வாலியின் வினாவுக்கு இலக்குவன் விடை பகர்தல்
'முன்பு , நின் தம்பி வந்து
சரண்புக , முறை இ(ல்)லோயைத்
‘’ தென் புலத்து உய்ப்பன் '' என்று
செப்பினன் ; செருவில் நீயும்
அன்பினை உயிருக்கு ஆகி ,
‘’ அடைக்கலம் யானும் '' என்றி
என்பது கருதி , அண்ணல்
மறைந்து நின்று எய்தது ' என்றான் . - 4.7.126
4164 - தன் குற்றம் உணர்ந்த வாலி இராமனைப் பணிந்து தான் செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்தருளுமாறு வேண்டுதல் (4164-4165)
கவி குலத்து அரசும் அன்ன
கட்டுரை கருத்தில் கொண்டான் ;
அவியுறு மனத்தன் ஆகி ,
'அறம் திறன் அழியச் செய்யான்
புவி உடை அண்ணல் ' என்பது
எண்ணினன் ; பொருந்தி முன்னே
செவி உறு கேள்விச் செல்வன்
சென்னியின் இறைஞ்சிச் சொன்னான் . - 4.7.127
4165 - 'தாய் என உயர்க்கு நல்கி ,
தருமமும் , தகவும் , சால்பும் ,
நீ என நின்ற நம்பி !
நெறியினின் நோக்கும் நேர்மை ,
நாய் என நின்ற எம்பால் ,
நவை அற உணரலாமே ?
தீயன பொறுத்தி ' என்றான்
சிறியன சிந்தி யாதான் . - 4.7.128
4166 - வாலி , தனக்கு மெய்யுணர்வருளிய இராமனைப் போற்றி வரம்
வேண்டுதல் (4166-4172)
இரந்தனன் பின்னும் ; 'எந்தை !
யாவதும் எண்ணல் தேற்றாக்
குரங்கு எனக் கருதி , நாயேன்
கூறிய மனம் அத்து கொள்ளேல் ;
அரந்தை வெம் பிறவி என் நோய்க்கு
அரு மருந்து அனைய ஐயா !
வரம் தரும் வள்ளால் ! ஒன்று
கேள் ' என மறித்தும் சொல்வான் : - 4.7.129
4167 - 'ஏவு கூர் வாளியால் எய்து , நாய் அடியனேன்
ஆவி போம் வேலை வாய் , அறிவு தந்து அருளினாய் ;
மூவர் நீ ! முதல்வன் நீ ! முற்றும் நீ ! மற்றும் நீ !
பாவம் நீ ! தருமம் நீ ! பகையும் நீ ! உறவும் நீ ! ' - 4.7.130
4168 - 'புரம் எலாம் எரி செய்தோன் முதலினோர் பொருவு இலா
வரம் எலாம் உருவி , என் வசை இலா வலிமை சால்
உரம் எலாம் உருவி , என் உயிர் எலாம் நுகரும் நின்
சரம் அலால் , பிறிது வேறு உளது அரோ தருமமே ? ' - 4.7.131
4169 - ‘’ யாவரும் எவையும் ஆய் , இருதுவும் பயனும் ஆய் ,
பூவும் நல் வெறியும் ஒத்து ஒருவ அரும் பொதுமையாய் !
'யாவன் நீ யாவது ' என்று அறிவினார் அருளினார் ;
தாவு அரும் பதம் எனக்கு அருமையோ ? தனிமையோய் !’’ - 4.7.132
4170 - 'உண்டு எனும் தருமமே உருவமாய் உடைய நிற்
கண்டு கொண்டேன் ; இனிக் காண என் கடவெனோ ?
பண்டொடு இன்று அளவுமே என் பெரும் பழவினைத்
தண்டமே , அடியனேற்கு உறு பதம் தருவதே . ' - 4.7.133
4171 - 'மற்று இனி உதவி உண்டோ ?
வானினும் உயர்ந்த மானக்
கொற்றவ ! நின்னை , என்னைக்
கொல்லிய கொணர்ந்து , தொல்லைச்
சிறு இனம் குரங்கினோடும்
தெரிவு உறச் செய்த செய்கை ,
வெற்று அரசு எய்தி , எம்பி ,
வீட்டு அரசு எனக்கு விட்டான் . ' - 4.7.134
4172 - 'ஓவிய உருவ ! நாயேன்
உளது ஒன்று பெறுவது உன்பால் ;
பூ இயல் நறவம் மாந்தி ,
புந்தி வேறு உற்ற போழ்தில் ,
தீவினை இயற்று மேனும் ,
எம்பி மேல் சீறி , என் மேல்
ஏவிய பகழி என்னும்
கூற்றினை ஏவல் ' என்றான் . - 4.7.135
4173 - வாலி மற்றும் ஒருவரம் வேண்டுதல்
'இன்னும் ஒன்று இரப்பது உண்டால் ;
எம்பியை உம்பிமார்கள்
‘’தன்முனைக் கொல்வித்தான் '' என்று
இகழ்வரேல் , தடுத்தி , தக்கோய் !
முன் முனே மொழிந்தாய் அன்றே ,
இவன் குறை முடிப்பது ? ஐயா !
பின் இவன் வினையின் செய்கை
அதனையும் பிழைக்கல் ஆமோ ? ' - 4.7.136
4174 - வாலி , இராமனுக்கு உதவ முடியாத தன்னிலைமையை நினைந்து இரங்கி , இராமனுக்கு அநுமனைப் பற்றித் தகவுரை பகர்தல் (4174-4175)
'மற்று இலென் எனினும் , மாய
அரக்கனை வாலின் பற்றி ,
கொற்றவ ! நின்கண் தந்து ,
குரக்கு இயல் தொழிலும் காட்டப்
பெற்றிலென் ; கடந்த சொல்லின் ,
பயன் இலை ; பிறிது ஒன்றேனும் ,
'உற்றது செய்க ' என்றாலும் ,
உரியன் இவ் அனுமன் ' என்றான் . - 4.7.137
4175 - 'அனுமன் என்பவனை - ஆழி
ஐய ! - நின் செய்ய செங்கைத்
தனு என நினைதி ; மற்று , என்
தம்பி நின் தம்பி ஆக
நினைதி ; ஓர் துணைவர் இன்னோர்
அனையவர் இலை ; நீ , ஈண்டு , அவ்
வனிதையை நாடிக் கோடி –
வானினும் உயர்ந்த தோளாய் ! - 4.7.138
4176 - வாலி , தன் தம்பி சுக்கிரீவனை அன்பினால் அணைத்து அவனுக்கு உறுதியுரை பகர்தல் (4176-4182)
என்று அவற்கு இயம்பி , பின்னர் ,
இருந்தனன் இளவல் தன்னை
வன் துணைத் தடக்கை நீட்டி
வாங்கினன் தழுவி , 'மைந்த !
ஒன்று உனக்கு உரைப்பது உண்டால்
உறுதி ; அஃது உணர்ந்து கோடி ;
குன்றினும் உயர்ந்த தோளாய் !
வருந்தலை ' என்று கூறும் : - 4.7.139
4177 - 'மறைகளும் , முனிவர் யாரும் ,
மலர் மிசை அயனும் , மற்றைத்
துறைகளின் முடிவும் , சொல்லும்
துணிபொருள் , தனி வில் தாங்கி ,
அறை கழல் இராமன் ஆகி ,
அற நெறி நிறுத்த வந்தது ;
இறை ஒரு சங்கை இன்றி
எண்ணுதி ; எண்ணம் மிக்கோய் ! ' - 4.7.140
4178 - 'நிற்கின்ற செல்வம் வேண்டி
நெறி நின்ற பொருள்கள் எல்லாம்
கற்கின்றது , இவன்தன் நாமம் ;
கருதுவது , இவனைக் கண்டாய் ;
பொற் குன்றம் அனைய தோளாய் !
பொது நின்ற தலைமை நோக்கின் ,
எற் கொன்ற வலியே சாலும் ;
இதற்கு ஒன்றும் ஏது வேண்டா . ' - 4.7.141
4179 - 'கைதவம் இயற்றி , யாண்டும்
கழிப்ப அரும் கணக்கு இல் தீமை
வைகலும் புரிந்துளாரும் ,
வான் உயர் நிலையை , வள்ளல்
எய்தவர் பெறுவர் என்றால் ,
இணை அடி இறைஞ்சி , ஏவல்
செய்தவர் பெறுவது , ஐயா !
செப்பலாம் தன்மைத்து ஆமோ ? ' - 4.7.142
4180 - 'அருமை என் ? விதியினாரே
உதவுவான் அமைந்த காலை ;
இருமையும் எய்தினாய் ; மற்று
இனிச் செயல் பாலது எண்ணின் ,
திருமறு மார்பன் ஏவல்
சென்னியில் சேர்த்தி , சிந்தை
ஒருமையின் நிறுவி , மும்மை
உலகினும் உயர்தி அன்றே . ' - 4.7.143
4181 - 'மத இயல் குரக்குச் செய்கை
மயர்வு ஒடு மாற்றி , வள்ளல்
உதவியை உன்னி , ஆவி
உற்ற இடம் அத்து உதவுகிற்றி ;
பதவியை எவர்க்கும் நல்கும்
பண்ணவன் பணித்த யாவும்
சிதைவு இல செய்து , நொய்தின் ,
தீர்வு அரும் பிறவி தீர்தி . ' - 4.7.144
4182 - 'அரசியல் பாரம் பூரித்து ,
அயர்ந்தனை இகழாது , ஐயன்
மரை மலர்ப் பாதம் நீங்கா
வாழுதி ; மன்னர் என்பார்
எரி எனற்கு உரியர் என்றே
எண்ணுதி ; எண்ணம் யாவும்
புரிதி ; சிறு அடிமை குற்றம்
பொறுப்பர் என்று எண்ண வேண்டா ' . - 4.7.145
4183 - வாலி , சுக்கிரீவனை இராமனிடம் அடைக்கலமாக ஒப்புவித்தல்
என்ன , இத் தகைய ஆய
உறுதிகள் யாவும் , ஏங்கும்
பின்னவற்கு இயம்பி , நின்ற
பேர் எழிலானை நோக்கி ,
'மன்னவர்க்கு அரசன் மைந்த !
மற்று இவன் , சுற்றத்தோடும்
உன் அடைக்கலம் ' என்று உய்த்தே ,
உயர்கரம் உச்சி வைத்தான் . - 4.7.146
4184 - வாலி , சுக்கிரீவனைக் கொண்டு அங்கதனை அழைத்து வரச் செய்தல்
வைத்தபின் , உரிமைத் தம்பி மா முகம் நோக்கி , 'வல்லை
உய்த்தனை கொணர்தி , உன் தன் ஓங்கு அரு மகனை ' என்ன ,
அ தலை அவனை ஏவி அழைத்தலின் , அணைந்தான் என்ப ;
கை தம் அத்து உவரி நீரைக் கலக்கினான் பயந்த காளை . - 4.7.147
4185 - அங்கதன் வாலியைக் காணுதல்
சுடர் உடை மதியம் என்னத்
தோன்றிய தோன்றல் , யாண்டும்
இடர் உடை உள்ளத் தோரை
எண்ணினும் உணர்ந்திலாதான் ,
மடல் உடை நறுமென் சேக்கை
மலை அன்றி , உதிர வாரிக்
கடல் இடை கிடந்த காதல்
தாதையைக் கண்ணின் கண்டான் . - 4.7.148
4186 - அங்கதன் , வாலியின்மீது வீழ்ந்து புலம்புதல் (4186-4190)
கண்ட கண் , கனலும் நீரும்
குருதியும் கால , மாலைக்
குண்டலம் அலம்பு கின்ற
குவவுத் தோள் குரிசில் , திங்கள்
மண்டலம் , உலகின் வந்து
கிடந்தது ; அம் மதியின் மீதா
விண் தலம் அதனின் நின்று ஓர்
மீன் விழுந்து என்ன , வீழ்ந்தான் . - 4.7.149
4187 - 'எந்தையே ! எந்தையே ! இவ்
எழு திரை வளாகத்து , யார்க்கும்
சிந்தையால் , செய்கையால் , ஓர்
தீவினை செய்திலாதாய் !
நொந்தனை ; அதுதான் நிற்க ,
நின்முகம் நோக்கிக் கூற்றும்
வந்ததே அன்றோ அஞ்சாது ?
ஆர் அதன் வலியைத் தீர்ப்பார் ? ' - 4.7.150
4188 - 'தறை அடித்தது போல் தீராத்
தகைய , இத் திசைகள் தாங்கும்
கறையடிக்கு , அழிவு செய்த
கண்டகன் நெஞ்சம் , உன்தன்
நிறை அடிக் கோல வாலின்
நிலைமையை நினையுந் தோறும்
பறை அடிக்கின்றது ; அந்தப்
பயம் அறப் பறந்தது அன்றே ? ' - 4.7.151
4189 - 'குலம் வரை , நேமிக் குன்றம்
என்ற வான் உயர்ந்த கோட்டின்
தலைகளும் , நின் பொன் தாளின்
தழும்பு , இனி , தவிர்ந்த அன்றே ?
மலைகொளும் அரவும் மற்றும்
மதியமும் பலவும் தாங்கி ,
அலைகடல் கடைய வேண்டின் ,
ஆர் இனிக் கடைவர் ? ஐயா ! ' - 4.7.152
4190 - 'பஞ்சின் மெல் அடியாள் பங்கன்
பாதுகம் அலாது யாதும்
அஞ்சலித்து அறியாச் செங்கை
ஆணையாய் ! அமரர் யாரும்
எஞ்சலர் இருந்தார் உன்னால் ;
இன் அமுது ஈந்த நீயோ
துஞ்சினை ; வள்ளியோர்கள்
நின்னின் யார் சொல்லற் பாலார் ? ' - 4.7.153
4191 - வருந்திய அங்கதனை வாலி தழுவித் தேற்றுதல்
ஆயன பலவும் பன்னி ,
அழுங்கினன் புழுங்கி , நோக்கித்
தீ உறு மெழுகின் சிந்தை
உருகினன் ; செங்கண் வாலி ,
'நீ இனி அயர்வாய் அல்லை '
என்று , தன் நெஞ்சில் புல்லி ,
'நாயகன் இராமன் செய்த , -
நல்வினைப் பயன் , இது ' என்றான் . - 4.7.154
4192 - வாலி அங்கதனுக்கு அறிவுரை கூறுதல் (4192-4194)
'தோன்றலும் , இறத்தல் தானும் ,
துகள் அறத் துணிந்து நோக்கின் ,
மூன்று உலகத்தினோர்க்கும்
மூலத்தே முடிந்த அன்றே ?
யான் தவம் உடைமையால் இவ்
இறுதி வந்து இசைந்தது ; யார்க்கும்
சான்று என நின்ற வீரன் ,
தான் வந்து வீடு தந்தான் . ' - 4.7.155
4193 - 'பாலமை தவிர் நீ ; என் சொல்
பற்றுதி ஆயின் , தன்னின்
மேல் ஒரு பொருளும் இல்லா
மெய் பொருள் , வில்லும் தாங்கி ,
கால் தரை தோய நின்று ,
கண் புலக்கு உற்றது அம்மா !
மால்தரும் பிறவி நோய்க்கு
மருந்து என வணங்கு மைந்த ! ' - 4.7.156
4194 - 'என் உயிர்க்கு இறுதி செய்தான்
என்பதை இறையும் எண்ணாது ,
உன் உயிர்க்கு உறுதி செய்தி ;
இவற்கு அமர் உற்றது உண்டேல் ,
பொன் உயிர்த்து ஒளிரும்
பூணாய் பொன்றுதி ; தருமம் போற்றி
மன்னுயிர்க்கு உறுதி செய்வான்
மலர் அடி சுமந்து வாழ்தி . ' - 4.7.157
4195 - அங்கதனுக்கு உறுதியுரை கூறிய வாலி , இராமனை நோக்கி இவ் அங்கதன் உன் கையடைப் பொருளாவான் எனக் காட்டுதல் (4195-4196)
என்றனன் இனைய ஆய
உறுதிகள் யாவும் சொல்லி ,
தன் துணைத் தடக்கை ஆரத்
தனயனைத் தழுவி , சாலக்
குன்றினும் உயர்ந்த திண்தோள்
குரக்கு இனத்து அரசன் , கொற்றப்
பொன் திணி வயிரப் பசுமை
பூண் புரவலன் தன்னை நோக்கி . - 4.7.158
4196 - 'நெய் அடை நெடும் வேல் தானை
நீல் நிற நிருதர் என்னும்
துய் அடை கனலி அன்ன
தோளினன் , தொழிலும் தூயன் ;
பொய் அடை உள்ளத்தார்க்குப்
புலப்படாப் புலவ ! மற்று உன்
கையடை ஆகும் ' என்று ,
அவ் இராமற்குக் காட்டும் காலை . - 4.7.159
4197 - அங்கதனை இராமன் ஏற்றுக் கொள்ள , வாலி பரமபதம் அடைதல்
தன் அடி தாழ்தலோடும்
தாமரைத் தடங்கணானும் ,
பொன் உடை வாளை நீட்டி ,
'நீ இது பொறுத்தி ' என்றான் ;
என்னலும் , உலகம் ஏழும்
ஏத்தின ; இறந்து , வாலி ,
அந் நிலை துறந்து , வானுக்கு
அ புறத்து உலகன் ஆனான் . - 4.7.160
4198 - வாலி உயிரைக் கவர்ந்த இராம பாணம் , தூயநீர்க்கடலில் நீராடி , இராமனது அம்பறாத் தூணியில் வந்தடைதல்
கை அவண் நெகிழ்தலோடும் ,
கடுங்கணை , கால வாலி
வெய்ய மார்பு அகம் அத்து உள் தங்காது
உருவி , மேக்கு உயர மீ போய் ,
துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து ,
தூய் மலர் அமரர் சூட்ட ,
ஐயன் வெந் விடாத கொற்றம் அத்து
ஆவம் வந்து அடைந்தது அன்றே . - 4.7.161
4199 - தன் கணவன் வாலி இறந்து வானுலகடைந்தமை கேட்ட தாரை , அங்கு வந்து அவன்மேல் வீழ்ந்து புரண்டு வருந்துதல்
வாலியும் ஏகினான் அவ் வரம்பு இலா உலகில் ; இன்பம்
பாலியா , முன்னர் நின்ற பரிதி சேய் செம் கை பற்றி ,
ஆல் இலைப் பள்ளியானும் , அங்கதனோடு போனான் ;
வேல் விழித் தாரை கேட்டாள் , வந்து அவன் மேனி வீழ்ந்தாள் . - 4.7.162
4200 - குங்குமம் கொட்டி அன்ன , குவிமுலைக் குவட்டிற்கு ஒக்கப்
பொங்கு , வெங் குருதி போர்ப்ப , புரிகுழல் சிவப்ப , பொன் தோள்
அங்கு அவன் அலங்கல் மார்பில் புரண்டனள் - அகன்ற செக்கர்
வெங்கதிர் விசும்பில் தோன்றும் மின் எனத் திகழும் மெய்யாள் . - 4.7.163
4201 - வேய்ங் குழல் , விளரி நல் யாழ் , வீணை என்று இவையும் நாண ,
ஏங்கினள் இரங்கி ; விம்மி உருகினள் ; இரு கை கூப்பி ,
தாங்கிய கலைகள் சோர்ந்து சரிதர , குழலும் தாழ ,
ஓங்கிய துயராள் , பன்னி , இனையன உரைக்கலுற்றாள் . - 4.7.164
4202 - தாரை புலம்புதல் (4202-4214)
'வரை சேர் தோள் இடை நாளும் வைகுவேன் ,
கரை சேரா இடர் வேலை காண்கலேன் ;
உரை சேர் ஆர் உயிரே ! என் உள்ளமே !
அரைசே ! யான் இது காண அஞ்சினேன் . ' - 4.7.165
4203 - 'துயராலே தொலையாத என்னையும் ,
பயிராயோ ? பகையாத பண்பினாய் !
செயிர் தீரா வினை ஆன தெய்வமே !
உயிர் போனால் , உடலாரும் உய்வரோ ? ' - 4.7.166
4204 - 'நறிது ஆம் நல் அமிழ்து உண்ண நல்கலின் ,
பிறியா இன் உயிர் பெற்ற பெற்றி , தாம்
அறியாரோ நமனார் ? அது அன்று எனின் ,
சிறியாரோ , உபகாரம் சிந்தியார் ? ' - 4.7.167
4205 - 'அணங்கு ஆர் பாகனை ஆசை தோறும் உற்று ,
உணங்கா ஒண் மலர் கொண்டு , உள் அன்பொடும்
இணங்கா , காலம் இரண்டொடு ஒன்றினும்
வணங்காது , இ துணை வைக வல்லையோ ? ' - 4.7.168
4206 - 'வரை ஆர் தோள் பொடி ஆடி வைகுவாய் !
தரை மேலாய் ; ‘’ உறு தன்மை ஈது '' எனக்
கரையாதேன் இடு பூசல் கண்டும் , ஒன்று
உரையாய் , என் வயின் ஊனம் யாவதோ ? ' - 4.7.169
4207 - 'நையா நின்றனன் , நான் இருந்து இங்ஙன் ;
மெய் வானோர் திருநாடு மேவினாய் ;
ஐயா ! 'நீ எனது ஆவி ' என்றதும் ,
பொய்யோ ? பொய் உரையாத புண்ணியா ! ' - 4.7.170
4208 - 'செரு ஆர் தோள ! நின் சிந்தையேன் எனின் ,
மருவார் வெஞ் சரம் எனையும் வௌவுமால் ;
ஒரு வேனுள் உளை ஆகில் உய்தியால் ;
இருவேம் உள் இருவேம் இருந்திலேம் . ' - 4.7.171
4209 - ' ‘’ எந்தாய் ! நீ அமிழ்து ஈய , யாம் எலாம்
உய்ந்தாம் '' என்று உபகாரம் உன்னுவார் ,
நந்தா நாள் மலர் சிந்தி , நண்பு ஒடு உம்
வந்தாரோ எதிர் ? வான் உளோர் எலாம் . ' - 4.7.172
4210 - 'ஓயா வாளி ஒளித்து நின்று எய்வான்
ஏயா வந்த இராமன் என்று உளான் ,
வாயால் ஏயினன் என்னின் , வாழ்வு எலாம்
ஈயாயோ ? அமிழ் தேயும் ஈகுவாய் ! ' - 4.7.173
4211 - 'சொற்றேன் , முந்து உற ; அன்ன சொல் கொளாய் ,
‘’ அற்றான் , அன்னது செய்கலான் '' எனா ,
உற்றாய் , உம்பியை ; ஊழி காணும் நீ ,
இற்றாய் ; யான் உனை என்று காண்பெனோ ? ' - 4.7.174
4212 - 'நீறு ஆம் , மேருவும் , நீ நெருக்கினால் ;
மாறு ஓர் வாளி , உன் மார்பை ஈர்வதோ ?
தேறேன் யான் இது , தேவர் மாயமோ ?
வேறு ஓர் வாலி கொல் ஆம் , விளிந்துளான் ? ' - 4.7.175
4213 - 'தகை நேர் வண் புகழ் நின்று , தம்பியார் ,
பகை நேர்வார் உளர் ஆன பண்பினால் ,
உக , நேர் சிந்தி உலந்து அழிந்தவால் ;
மகனே ! கண்டிலையோ , நம் வாழ்வு எலாம் ? - 4.7.176
4214 - 'அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார் ,
ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார் ;
தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம் ,
கருமம் கட்டளை என்றல் கட்டதோ ? ' - 4.7.177
4215 - 'அனுமன் , வானர மகளிரைக் கொண்டு தாரையை அந்தப்புரத்திற்கு அனுப்பிவிட்டு , வாலிக்கு இறுதிக்கடன் செய்வித்து இராமனையடைந்து நிகழ்ந்தன கூறல் (4215-4216)
என்றாள் , இன்னன பன்னி , இன்னலோடு
ஒன்றானாள் ; உணர்வு ஏதும் உற்றிலாள் ;
நின்றாள் ; அ நிலை நோக்கி , நீதிசால் ,
வன் தாள் மால்வரை அன்ன மாருதி , - 4.7.178
4216 - மடவாரால் அம் மடந்தை முன்னர் வாழ்
இடம் மேவும்படி ஏவி , வாலிபால்
கடன் யாவும் கடைகண்டு , கண்ணனோடு
உடனாய் உற்றது எலாம் உணர்த்தினான் . - 4.7.179
4217 - சூரியன் மறைதலும் இராமன் இரவுப் பொழுதை அரிதிற் கழித்தலும் (4217-4218)
அகம் ஏர் அற்று உக , மீது அருக்கனார்
புக மேலை கிரி , புக்க போதினில் ,
நகமே ஒத்த குரக்கு நாயகன்
முகமே ஒத்தது , மூரி மண்டிலம் . - 4.7.180
4218 - மறைந்தான் மாலை அருக்கன் ; வள்ளியோன்
உறைந்தான் , மங்கை திறத்தை உன்னுவான் ;
குறைந்தான் , நெஞ்சு குழைந்து அழுங்குவான் ,
நிறைந்து ஆர் கங்குலின் வேலை நீந்தினான் . - 4.7.181
This file was last updated on 30 May 2014.
.